கோவை கிழக்கு புறவழிச்சாலை திட்டத்தை ரத்து செய்ய வேண்டும்! – விவசாயிகள் ஆலோசனைக் கூட்டம்.

மங்கலம்: பல்லடத்தில் செம்மிபாளையம் முதல் பெரியநாயக்கன்பாளையம் வரை புதிதாக அமையவுள்ள கோவை கிழக்கு புறவழிச்சாலை திட்டத்தை ரத்து செய்ய வேண்டும் எனக்கூறி விவசாயிகள் ஆலோசனைக்கூட்டம் நடைபெற்றது.

நாளைய வரலாறு புலனாய்வு இதழின்,,,,
மேலும் பல முக்கிய காணொளி செய்திகள் காண,
Please Subscribe to This Channel to get current news ↓
https://www.youtube.com/channel/UCBXly8ucYf64DrK5QkzMOZQ

செம்மிபாளையம் முதல் பெரியநாயக்கன்பாளையம் வரையிலான புதிதாக அமையவுள்ள கோவை கிழக்கு புறவழிச்சாலை திட்டத்தை ரத்து செய்ய வேண்டும் என தீர்மானம் நிறைவேற்றப்பட்டது

திருப்பூர் மாவட்டம்,பல்லடம் வட்டம் செம்மிபாளையம் பகுதியில் துவங்கி பெரியநாயக்கன் பாளையம் வரை புதிதாக கோவை கிழக்கு புறவழிச்சாலை திட்டம் தயாரிக்கபட்டுள்ளதாகவும் அதற்கு தார்சாலையில் மார்க்கிங் நடைபெற்று உள்ளதாக கூறப்படுகிறது.

இது பற்றி தகவல் அறிந்த செம்மிபாளையம், சுக்கம்பாளையம், நடுவேலம்பாளையம், பள்ளிபாளையம்,கிடாதுறைபுதூர்,காளிபாளையம்,சாமளாபுரம் கிராமங்களைச் சேர்ந்த விவசாயிகள் மற்றும் பொதுமக்கள் பங்கேற்ற ஆலோசனை கூட்டம் பள்ளிபாளையம் அருகே உள்ள பத்திரகாளியம்மன் கோவில் மண்டபத்தில் நடைபெற்றது .இந்த கூட்டத்திற்கு தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தின் மாவட்ட துணை செயலாளர் வை.பழனிச்சாமி-அவர்கள் தலைமை தாங்கினார்.

மேலும் இந்த ஆலோசனைக்கூட்டத்தில் தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தின் கோவை மாவட்ட செயலாளர் வி.ஆர்.பழனிச்சாமி-அவர்கள்,பல்லடம் ஒன்றிய குழு முன்னாள் தலைவர் கே.ஜி.பாலசுப்பிரமணியம்-அவர்கள்,கிடாதுறைபுதூர் பொன்னுச்சாமி-அவர்கள், கொங்கு மண்டல விவசாயிகள் பாதுகாப்பு குழு ஒருங்கிணைப்பாளர் சதீஸ்குமார்-அவர்கள்,இணை ஒருங்கிணைப்பாளர் பிரகாஷ்-அவர்கள்,கொங்கு மண்டல விவசாய நிலங்கள் பாதுகாப்பு கூட்டமைப்பு நிர்வாகிகள், விவசாயிகள், பொதுமக்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
இந்த ஆலோசனைக் கூட்டத்தில் “செம்மிபாளையம் முதல் பெரியநாயக்கன்பாளையம் வரையிலான புதிதாக அமையவுள்ள கோவை கிழக்கு புறவழிச்சாலை திட்டத்தை ரத்து செய்ய வேண்டும் என ஏகமனதாக தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

நாளைய வரலாறு செய்திகளுக்காக

-பாஷா.

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Search

Recent Posts