
தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள காயல்பட்டினம், ஆழ்வார்திருநகரி மற்றும் கொளத்தூர் பகுதிகளைச் சேர்ந்த கபடி வீரர்கள் மற்றும் வீராங்கனைகள், கபடி மேட் வழங்க வேண்டும் என்று திமுக துணைப் பொதுச் செயலாளரும், திமுக நாடாளுமன்றக் குழுத் தலைவருமான கனிமொழி கருணாநிதி எம்.பியிடம் கோரிக்கை வைத்தனர். அவர்களின் கோரிக்கையை ஏற்றுக்கொண்ட கனிமொழி கருணாநிதி எம்.பி, உடனடியாக தனது சொந்த செலவில் கபடி மேட் வாங்கி, கடந்த (16/08/2025) தூத்துக்குடி நாடாளுமன்ற அலுவலகத்தில் கபடி வீரர்கள் மற்றும் வீராங்கனைகளுக்கு வழங்கினார்.


நாளைய வரலாறு செய்திகளுக்காக
தூத்துக்குடி மாவட்ட செய்தியாளர்
-பூங்கோதை.












