
கோவை மாவட்டம் பொள்ளாச்சி வால்பாறை மாண்புமிகு தமிழக முதல்வர் அவர்கள் தமிழகத்தில் உள்ள கடை கோடி மக்களும் அரசின் திட்டங்கள் அரசு சேவைகள் எளிதில் பயனடைய வேண்டும் எண்ணத்தில் ஒவ்வொரு கிராமங்களுக்கும் அரசின் உயர் அதிகாரிகளும், மக்கள் பிரதிநிதிகளும் கலந்து கொண்டு சாமானிய மக்களை பாதுகாக்க வேண்டும் என்று உங்களுடன் ஸ்டாலின் என்ற பெயரில் துவங்கப்பட்டது.

நாளைய வரலாறு புலனாய்வு இதழின்,,,,
மேலும் பல முக்கிய காணொளி செய்திகள் காண,
Please Subscribe to This Channel to get current news ↓
https://www.youtube.com/channel/UCBXly8ucYf64DrK5QkzMOZQ

தற்பொழுது தமிழக முழுவதும் நடந்து கொண்டிருக்கிறது. இந்நிலையில் வால்பாறை 21 வார்டு உள்ளனர். பல பகுதிகளில் உயிர் காக்க அவசர சிகிச்சைக்கும் மருத்துவ உதவி பெறுவதற்கும் ஆம்புலன்ஸ் கூட போக முடியாமல் சாலைகள் குண்டும் குழியுமாக, தேவையான இடங்களில் தெரு விளக்குகள் இல்லாமலும் தெரு விளக்குகள் எரியாமலும் அடிக்கடி வனவிலங்கும் மனித மோதலும் ஏற்படுவதும் ஒரு சில நேரங்களில் சாமானிய மக்கள் உயிரிழப்பு ஏற்படுவதும் போன்ற பல வேறு பிரச்சனையோடு வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள்.
இவர்கள் குடியிருக்கும் பகுதிகளுக்கு அரசு உயர் அதிகாரிகள் மக்கள் பிரதிநிதிகள் நேரடியாக சென்றாள் சாமானிய மக்களின் குறைகளை சரி செய்து கொடுக்க முடியாது காரணத்தால் வால்பாறை தாலுக்காவில் ஏழு இடங்களில் சாலையோர பகுதிகளில் முகாம்கள் அமைக்கப்பட்டு நடத்திக் கொண்டிருக்கிறார்கள் அதிலும் குறிப்பாக அமைச்சர் பெருமக்கள் அரசு உயர் அதிகாரிகள் கலந்து கொள்ளாமல் இருப்பதும் அறிவிப்பு பலகையில் உள்ள அரசின் திட்டங்களை பொதுமக்கள் பயன்பாட்டிற்கு இல்லாமல் இருப்பதும், தமிழ்நாடு முழுவதும் உங்கள் ஊரில் ஸ்டாலின் முகாம் நடைபெறுகிறது.
வால்பாறையில் நடந்தாக வேண்டும் நாங்களும் நடத்துகிறோம் என்று vஅரசு அதிகாரிகள் நடத்திக் கொண்டிருக்கிறார்கள். இது தொடர்பாக இதுவரை வால்பாறை தாலுகாவில் நடைபெற்ற உங்களுடன் ஸ்டாலின் முகாமில் நான் கலந்து கொண்டேன் மாற்றுத்திறனாளி புதிய அட்டை புதிதாக போடப்படும் என்று அறிவிப்பு பலகைகள் வைத்திருந்தார்கள். நானும் முகாமிற்கு சென்று கேட்டேன் அப்பொழுது மருத்துவ பரிசோதனை செய்வதற்கு பொள்ளாச்சி, கோவை அரசு மருத்துவமனைக்கு மாற்றுத்திறனாளியின் தன்மையை அறிந்து,சதவீதம் போடப்பட்டு அட்டை வாங்கி வாருங்கள் அப்பொழுதுதான் நீங்கள் அரசின் திட்டங்கள் பெற முடியும் என்று அதிகாரிகள் கூறினார்கள. எனது பெயரை தயவுசெய்து போட்டு விடாதீர்கள் நான் எப்படி பொள்ளாச்சி கோவை மருத்துவமனைக்கு சென்று அட்டை வாங்குவேன் என்று கவலையாக உள்ளது மனக்குமரலோடு கூறினார்.
அப்படியே வாங்கினாலும் இவர்கள் தய வில்லாமல் என்னால் அரசின் திட்டங்கள் பெற முடியாது என்று வேதனையோடு தெரிவித்தார்.நாமும் களத்தில் ஆய்வு செய்தும் இது.வரை நடைபெற்ற எந்த முகாமிலும் அரசு உயர் அதிகாரிகள் அமைச்சர் பெருமக்கள் யாரும் கலந்து கொள்ளவும் இல்லை மாற்றுத்திறனாளிக்கு புதிய அடையாள அட்டை வழங்குவதில்லை அப்படி தேவை என்றால் பொள்ளாச்சி கோவை மருத்துவமனைக்கு போயிட்டு வாருங்கள் என்று எளிதாக கூறி விடுகிறார்கள பல எஸ்டேட் பகுதிகளில் சாலைகள் குண்டும் குழியுமாகும் வாகனங்கள் போக முடியாமலும் வனவிலங்கு தொல்லையும், தெருவிளக்கு எரியாமலும் தவித்துக் கொண்டிருக்கிறார்கள் இப் பொழுதாவது இவர்கள் குடியிருக்கும் பகுதிக்கு வந்த பார்த்தார்கள் என்றால் முடிவு தெரியும் என்று எதிர்பார்த்தோம் ஆனால் அது நடக்கவில்லை இனிவரும் காலங்களில் எஸ்டேட் பகுதியில் அருகிலே அமைச்சர் பெருமக்கள் அரசு உயர் அதிகாரிகள் மக்களுக்கு தேவையான அரசின் திட்டங்கள் உடனடியாக கிடைப்பதற்கு முகாம் நடைபெறும் பகுதியில் அருகில் உள்ள குடியிருப்புகளில் அரசின் திட்டங்கள் என்னென்ன என்ன உங்களுக்கு தேவை என்று உள்ள படிவத்தை வீடுகள் தவறாமல் கொடுக்க வேண்டும்.
தற்பொழுது பல பகுதிகளில் விவரம் பட்டியல்கள் கொடுக்காமல் சாமானிய மக்கள் மிகவும் சிரமப்படுகின்றன யாரிடம் கேட்பது என்று தெரியாமல் தவித்துக் கொண்டிருக்கிறார்கள். இனியாவது மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்குமா என்பது பார்ப்போம் இல்லை கண் இருந்தும் குருடர் போல்,காது இருந்தும் செவிடரை போல் வாய் இருந்தும் உவமையைப் போல் படித்த அறிவு உள்ள ஜீவன்கள் இருப்பார்களா என்று பொறுத்திருந்து பார்ப்போம்.
நாளைய வரலாறு செய்திகளுக்காக
-P.பரமசிவம்.











