தூத்துக்குடி தருவை மைதானத்தில் தேசியக் கொடியை ஏற்றி அணிவகுப்பு மரியாதையுடன் சொதந்திர தின விழா கொண்டாடப்பட்டது!!

79வது “சுதந்திர தினத்தை” முன்னிட்டு தூத்துக்குடி தருவை மைதானத்தில் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு. ஆல்பர்ட் ஜான் இ.கா.ப., அவர்கள் முன்னிலையில் மாவட்ட ஆட்சியர் திரு. கே. இளம்பகவத் இ.ஆ.ப அவர்கள் தேசியக் கொடியை ஏற்றி வைத்து மரியாதை செலுத்தி ஆயுதப்படை காவல்துறையினரின் அணிவகுப்பு மரியாதையை ஏற்றுக் கொண்டார்.

நாளைய வரலாறு புலனாய்வு இதழின்,,,,
மேலும் பல முக்கிய காணொளி செய்திகள் காண,
Please Subscribe to This Channel to get current news ↓
https://www.youtube.com/channel/UCBXly8ucYf64DrK5QkzMOZQ

தூத்துக்குடி தருவை மைதானத்தில் 79வது ‘சுதந்திர தின விழா” நடைபெற்றது. தூத்துக்குடி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு. ஆல்பர்ட் ஜான் இ.கா.ப அவர்கள் முன்னிலையில் தூத்துக்குடி மாவட்ட ஆட்சித் தலைவர் கே. இளம்பகவத் இ.ஆ.ப அவர்கள் இன்று (15.08.2025) காலை 09.05 மணிக்கு தேசியக் கொடியை ஏற்றி வைத்து மரியாதை செலுத்தி, ஆயுதப்படை காவல்துறையினரின் அணிவகுப்பு மரியாதையை ஏற்றுக்கொண்டார்.*

காவல் ஆய்வாளர் திரு. சுனைமுருகன் தலைமையில் ஆயுதப்படை காவல்துறையினரின் 1வது படைப்பிரிவின் கமாண்டராக உதவி ஆய்வாளர் திரு. பிரம்மநாயகம், 2வது பெண் காவலர்கள் படைப்பிரிவின் கமாண்டராக உதவி ஆய்வாளர் திருமதி. பரமேஸ்வரி மற்றும் 3வது படைப்பிரிவின் கமாண்டராக உதவி ஆய்வாளர் திரு. சக்திவேல் ஆகியோர் முன்னிலை வகித்து, காவல்துறை அணிவகுப்பு மிக கம்பீரமாக நடைபெற்றது.*

இதனையடுத்து தூத்துக்குடி மாவட்டத்தில் சிறப்பாக பணிபுரிந்த திருச்செந்தூர் உட்கோட்ட காவல் துணை கண்காணிப்பாளர் திரு. மகேஷ்குமார், கோவில்பட்டி உட்கோட்ட காவல் துணை கண்காணிப்பாளர் திரு. ஜெகநாதன் உட்பட காவல்துறையினர், காவல் அமைச்சுப் பணியாளர்கள் என மொத்தம் 69 நபர்களுக்கு மாவட்ட ஆட்சியர் அவர்களின் பாராட்டுச் சான்றிதழ் வழங்கப்பட்டது.*

மாவட்ட ஆட்சியர் அவர்களின் பாராட்டுச் சான்றிதழ் பெற்ற காவல்துறையினரை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு. ஆல்பர்ட் ஜான் இ.கா.ப அவர்கள் பாராட்டினார்.*

நாளைய வரலாறு செய்திகளுக்காக

தூத்துக்குடி மாவட்ட செய்தியாளர்
-ந.பூங்கோதை.

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Search

Recent Posts