
கந்தர்வக்கோட்டை அருகே அக்கச்சிப்பட்டி நடுநிலைப் பள்ளியில் உலக உணவு பாதுகாப்பு தினத்தை முன்னிட்டு சரிவிகித உணவை தினந்தோறும் உண்ண வேண்டும் என மாணவர்களுக்கு அறிவுரை.

நாளைய வரலாறு புலனாய்வு இதழின்,,,,மேலும் பல முக்கிய காணொளி செய்திகள் காண,Please Subscribe to This Channel to get current news ↓
https://www.youtube.com/channel/UCBXly8ucYf64DrK5QkzMOZQ
கந்தர்வக்கோட்டை ஜீன் 10
புதுக்கோட்டை மாவட்டம் கந்தர்வகோட்டை ஒன்றியம் அக்கச்சிப்பட்டி ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியில் உலக உணவு பாதுகாப்பு தினத்தை முன்னிட்டு மாணவர்கள் அனைவரும் உணவுகளை வீணாக்காமல் தினந்தோறும் சரிவிகித உணவுகளை உண்ண வேண்டும் என அறிவுரை வழங்கப்பட்டது. உலக உணவு பாதுகாப்பு தினம் குறித்து அறிவியல் பட்டதாரி ஆசிரியர் ரஹ்மத்துல்லா பேசும் பொழுது
ஒவ்வொரு ஆண்டும் ஜூன் 7 அன்று உலக உணவு பாதுகாப்பு தினம் கடைபிடிக்கப்படுகிறது. உணவினால் ஏற்படும் உடல்நலக் குறைபாடுகளைத் தடுக்கவும், பாதுகாப்பான உணவை உறுதி செய்வதைப் பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்தவும் ஐக்கிய நாடுகள் சபையின் உலக உணவு பாதுகாப்பு தினம் கடைபிடிக்கப்படுகிறது.
உலக உணவு பாதுகாப்பு தினத்தில் அனைவரும் உணவுப் பொருட்களை வீணாக்காமல் பாதுகாக்க வேண்டும். மாணவர்கள் அனைவரும் எப்போதுமே உணவுப் பொருட்களை வீணாக்கக்கூடாது தங்களுக்கு தேவையான உணவுப் பொருட்களை மட்டும் எடுத்துக் கொள்ள வேண்டும் என்றும் உலக உணவு பாதுகாப்பு தினத்தின் கருப்பொருள்
சுமையிலிருந்து தீர்வுகளுக்கு – எங்கும் பாதுகாப்பான உணவு’ என்ற 2026 உலக உணவுப் பாதுகாப்பு தினத்தின் கருப்பொருளாக வெளியிடப்பட்டுள்ளது.
பாதுகாப்பான உணவுப் பழக்கவழக்கங்கள் மூலம் நோய்களை தடுக்கலாம் என்றும்,ஒவ்வொருவரின் ஆரோக்கியத்திற்கும் பாதுகாப்பான உணவு இன்றியமையாதது என்று பேசினார்.
நாளைய வரலாறு செய்திகளுக்காக
-ஈசா.












