
கோவை மாவட்டம் பொள்ளாச்சி வட்டாரம் வால்பாறை தாலுகா பகுதிகளில் மக்கள் குடியிருப்பு எஸ்டேட் பகுதிகளில் வனவிலங்கு சிறுத்தை, புலிகள் அதிக நடமாட்டம் உள்ளது. இதனால் குழந்தைகள் மற்றும் வீடுகளிலேயே வளர்க்கும் ஆடு ,மாடு மற்றும் நாய்களையும் பாதுகாப்பாக வைக்க வேண்டியது அவசியம்.

நாளைய வரலாறு புலனாய்வு இதழின்,,,,
மேலும் பல முக்கிய காணொளி செய்திகள் காண,
Please Subscribe to This Channel to get current news ↓
https://www.youtube.com/channel/UCBXly8ucYf64DrK5QkzMOZQ
வால்பாறை டவுன் பகுதி, அண்ணா நகர், துளசிங்க நகர், காமராஜ நகர், வாழைத்தோட்டம், எம்ஜிஆர் நகர், கோப்பர்ட்டி காலனி, பி ஏ பி காலனி மற்றும் பெரியார் நகர் சோலையார் டேம் ரொட்டிக்கடை ஆகிய பகுதிகளில் அதிக அளவு தெருநாய்கள் சுற்றி திரிகின்றன. இதனால் இந்த தெரு நாயக்களை வேட்டையாட வரும் சிறுத்தைகள் மனித குழந்தைகளையும் வேட்டையாடும் அபாயம் ஏற்பட்டுள்ளது.
அதுமட்டுமின்றி இந்த தெரு நாய்க்கள் சிறு குழந்தைகளையும் தனியாகப் போகும் நபர்களையும் துரத்தி கடித்து விடுகிறது. இதனை கருத்தில்க் கொண்டு வால்பாறை நகராட்சி ஆய்வாளர் மற்றும் சுகாதார ஆய்வாளர்கள் தெரு நாய்களை பிடிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கூறி வருகின்றனர்.
நாளைய வரலாறு செய்திகளுக்காக
திவ்யக்குமார்











