
புதூர் பயிர் உற்பத்தியாளர் கம்பெனியில் விவசாயிகளிடம் வசூல் செய்த வங்கி கடன் தொகையை வங்கியில் செலுத்தாமல் கோடிக்கணக்கில் மோசடி செய்த மோசடி நபர்கள் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தியும்,விவசாயிகள் பணத்தை வங்கியில் திரும்ப செலுத்த வலியுறுத்தியும் புதூர் பயிர் உற்பத்தியாளர் கம்பெனியில் இன்று (13/08/25) தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் சார்பில் நடைபெறுவதாக அறிவிக்கப்பட்டிருந்த காத்திருக்கும் போராட்டத்தை ஒட்டி நேற்று மாலை 5 மணிக்கு வட்டாட்சியர் அலுவலகத்தில் அமைதிப் பேச்சுவார்த்தை நடைபெற்றது.

நாளைய வரலாறு புலனாய்வு இதழின்,,,,
மேலும் பல முக்கிய காணொளி செய்திகள் காண,
Please Subscribe to This Channel to get current news ↓
https://www.youtube.com/channel/UCBXly8ucYf64DrK5QkzMOZQ
பேச்சுவார்த்தையில் இன்று காலை 12 மணிக்குள் ரூ.20 லட்சம் எட்டயபுரம் கனரா வங்கியில் செலுத்தி விடுவதாகவும் அதன் மூலம் மூன்று உழவர் குழுவிற்கு இன்று கணக்கு முடிப்பதாகவும் ஒரு வார காலத்திற்குள் மீண்டும் ஒரு குழுவிற்கு கணக்கு முடிவதாகவும் தெரிவிக்கப்பட்டது. மேலும் ஒரு மாத காலத்திற்குள் அனைத்து தொகையையும் வங்கியில் செலுத்தி விடுவதாகவும் தெரிவிக்கப்பட்டது.
ஆனால் இன்று மாலை 3 மணி வரை வங்கியில் ரூ.20 லட்சம் செலுத்தாத காரணத்தினால் பாதிக்கப்பட்ட விவசாயிகள் தமிழ்நாடு விவசாயிகள் சங்க மாவட்ட செயலாளர் புவிராஜ் தலைமையில் விளாத்திகுளம் புதூர் பயர் உற்பத்தியாளர் கம்பெனியில் காத்திருக்கும் போராட்டத்தில் ஈடுபட்டு வருகிறார்கள். போராட்டத்தில் தமிழ்நாடு விவசாயிகள் சங்க தாலுகா தலைவர் ராமலிங்கம் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி தாலுகா செயலாளர் ஜோதி முன்னாள் ஒன்றிய கவுன்சிலர் விஜயகுமார்மேல அருணாசலபுரம் முன்னாள் ஊராட்சி மன்ற தலைவர் சண்முகசுந்தரம் உள்ளிட்டோரும் கலந்து கொண்டனர்.
நாளைய வரலாறு செய்திகளுக்காக
தூத்துக்குடி மாவட்ட செய்தியாளர்
-ந.பூங்கோதை.











