
கோவை மாவட்டம் பொள்ளாச்சி பெரியார் ஆற்றுப் பாசன (PAP Parambikulam Aliyar Project) திட்டம், தமிழகத்திற்கும் குறிப்பாக கோயம்புத்தூர், திருப்பூர், ஈரோடு, திண்டுக்கல் மாவட்டங்களுக்கும் மிகப்பெரிய பாசன, குடிநீர் மற்றும் மின் உற்பத்தி ஆதாரமாக விளங்குகிறது. 1950களில் கேரளா தமிழகம் இடையேயான நீர்ப் பகிர்வு ஒப்பந்தத்தின் அடிப்படையில் உருவான இந்தத் திட்டம், 1960களில் முழுமையாக செயல்பாட்டிற்கு வந்தது.

நாளைய வரலாறு புலனாய்வு இதழின்,,,,
மேலும் பல முக்கிய காணொளி செய்திகள் காண,
Please Subscribe to This Channel to get current news ↓
https://www.youtube.com/channel/UCBXly8ucYf64DrK5QkzMOZQ

இந்தத் திட்டம் உருவாக, செயல்படுத்த மற்றும் மக்கள் பயன்பாட்டிற்கு கொண்டு வரப் பல தலைவர்கள் முக்கிய பங்கு வகித்தனர்.
முன்னாள் முதல்வர் காமராஜர் திட்டத்துக்கு அரசின் அங்கீகாரம், நிதி மற்றும் நிர்வாக அனுமதி பெற்றுத் தந்தார்.
வி.கே. பழனிச்சாமி கவுண்டர் மேலவை உறுப்பினராக, திட்டம் தொடர்பான அரசியல் பேச்சுவார்த்தைகள் மற்றும் நிதி ஒதுக்கீடுகளில் செயல்பட்டார்.
சி. சுப்பிரமணியம் மத்திய வேளாண்மை அமைச்சராக, திட்டம் தொடர்பான மத்திய அரசின் ஒப்புதலைவும் நிதி உதவியையும் பெற்றுத் தந்தார்.
பொள்ளாச்சி நா. மகாலிங்கம் தன் தொகுதி மற்றும் சுற்றுப்புற விவசாயிகளுக்காக திட்டத்தை வலியுறுத்தி, நிலம், வாய்க்கால் பாதை போன்ற அடித்தள பணிகளில் தொடர்ந்து உழைத்தார்.
இந்த வரலாற்றுப் பங்களிப்பை நினைவுகூர்ந்து, முதல்வரின் உத்தரவின்படி பிஏபி அலுவலகத்தில் இவர்களின் சிலைகள் அமைக்கப்பட்டன. இன்று, முதல்வர் நேரில் வந்து இந்தச் சிலைகளை திறந்து வைத்து, பி.ஏ.பி. திட்டம் தமிழக வேளாண்மையில் ஏற்படுத்திய மாற்றத்தையும், முன்னோடிகளின் சேவையையும் பாராட்டினார்.
நாளைய வரலாறு செய்திகளுக்காக
-M.சுரேஷ்குமார்













