
தூத்துக்குடி மாவட்டம் : 25.08.2025
தூத்துக்குடி மாவட்ட மோப்ப நாய் படை பிரிவிற்கு மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அவர்கள் இன்று 2 புதிய நாய்க்குட்டிகளை வழங்கி சிறப்பாக பயிற்சி அளிக்குமாறு அறிவுரைகள் வழங்கினார்.

நாளைய வரலாறு புலனாய்வு இதழின்,,,,
மேலும் பல முக்கிய காணொளி செய்திகள் காண,
Please Subscribe to This Channel to get current news ↓
https://www.youtube.com/channel/UCBXly8ucYf64DrK5QkzMOZQ
தூத்துக்குடி மாவட்ட மோப்பநாய் படை பிரிவிற்கு மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு. ஆல்பர்ட் ஜான் இ.கா.ப அவர்கள் இன்று (25.08.2025) 2 புதிய நாய்க்குட்டிகளை வழங்கி அவற்றை நன்றாக பேணிக்காத்தும் போதைப் பொருள் நுண்ணறிவு மற்றும் குற்ற நிகழ்வுகள் கண்டறியும் நுண்ணறிவு ஆகியவற்றில் திறம்பட விளங்க பயிற்சி அளிக்குமாறு மோப்பநாய் படை பிரிவு காவல்துறையினருக்கு அறிவுரைகள் வழங்கினார்.
இந்நிகழ்வின் போது தூத்துக்குடி தலைமையிடத்து காவல்துறை கூடுதல் கண்காணிப்பாளர் திரு. ஆறுமுகம், மோப்பநாய் படை பிரிவு சார்பு ஆய்வாளர் திரு. ஸ்ரீகுமார் உட்பட காவல்துறையினர் உடனிருந்தனர்.
நாளைய வரலாறு செய்திகளுக்காக
செயலாளர்
-பரணி பாலா.











