ஆசிரியை கண்டித்ததால் மூன்று மாணவிகள் தற்கொலை முயற்சி பொள்ளாச்சியில் பரபரப்பு!!

கோவை மாவட்டம் பொள்ளாச்சி அடுத்த கஞ்சம்பட்டியில் உள்ள அரசு மேல்நிலைப்பள்ளி ஒன்றில் ஆசிரியர் கண்டித்ததால் மூன்று மாணவிகள் தற்கொலைக்கு முயன்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

நாளைய வரலாறு புலனாய்வு இதழின்,,,,
மேலும் பல முக்கிய காணொளி செய்திகள் காண,
Please Subscribe to This Channel to get current news ↓
https://www.youtube.com/channel/UCBXly8ucYf64DrK5QkzMOZQ

கஞ்சம்பட்டி அரசு மேல்நிலைப்பள்ளியில் காலாண்டு தேர்வுகள் நடைபெற்று வருகின்றன இந்நிலையில் பள்ளியில் இருந்த மூன்று மாணவிகளை ஆசிரியை ஒருவர் காதல் விவகாரம் தொடர்பாக கண்டித்துள்ளார்.

இதனால் மனமுடைந்த மாணவிகள் மூவரும் பள்ளி வளாகத்திலேயே சாணி பவுடர் குடித்து தற்கொலைக்கு முயன்றனர்.

இதனைக் கண்ட சக மாணவர்கள் மற்றும் ஆசிரியர்கள் உடனடியாக அவர்களை மீட்டு பொள்ளாச்சி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர். தற்போது அவர்களின் உடல்நிலை சீராக இருப்பதாக கூறப்படுகிறது.

இந்த சம்பவம் குறித்து தகவல் அறிந்த மாணவிகளின் பெற்றோர்கள் பள்ளிக்கு வந்து சம்பந்தப்பட்ட ஆசிரியையிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். மேலும் இந்த சம்பவம் குறித்து போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.

போலீசார் பள்ளிக்கு வந்து ஆசிரியர்கள் மற்றும் பெற்றோர்களிடம் விசாரணை நடத்தி வருகின்றனர்.

நாளைய வரலாறு செய்திகளுக்காக

உங்கள் செய்தியாளர்
-𝗠.சுரேஷ்குமார்.

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Search

Recent Posts