உலக வெறி நோய் தினத்தை ஒட்டிய சிறப்பு இலவச வெறிநோய் தடுப்பூசி பணி முகாம்!!

தஞ்சாவூர்: ஒவ்வொரு ஆண்டும் செப்டம்பர் 28-ஆம் தேதி உலக வெறிநோய் தினம் ( World Rabies Day) கடைபிடிக்கப்பட்டு வருகிறது. அதனை ஒட்டி தஞ்சாவூர் மாவட்ட ஆட்சித் தலைவர் திருமதி. பா. பிரியங்கா பங்கஜம், இ.ஆ.ப அவர்கள் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் தஞ்சாவூர் மாவட்டத்தில் உள்ள 105 கால்நடை மருந்தகங்கள், 7 கால்நடை மருத்துவமனைகள், ஒரு கால்நடை பெருமருத்துவமனை மற்றும் ஒரு கால்நடை பன்முக மருத்துவமனை ஆகியவற்றில் காலை 8.00 மணி முதல் 12.00 மணி வரை மேற்கொள்ளப்படும் இலவச சிறப்பு வெறி நோய் தடுப்பூசி பணி முகாமில் 3 மாதங்களுக்கு மேற்பட்ட வயதுடைய தங்களுடைய நாய், பூனை உள்ளிட்ட செல்லப்பிராணிகளுக்கு வெறிநோய் தடுப்பூசி மேற்கொண்டு பொதுமக்கள் பயன்பெறுமாறு கேட்டுக் கொண்டுள்ளார்.

நாளைய வரலாறு புலனாய்வு இதழின்,,,,
மேலும் பல முக்கிய காணொளி செய்திகள் காண,
Please Subscribe to This Channel to get current news ↓
https://www.youtube.com/channel/UCBXly8ucYf64DrK5QkzMOZQ

மேலும் தமிழ்நாடு அரசு கால்நடை பராமரிப்புத்துறை, பிராணிகள் வதை தடுப்பு சங்கம் (SPCA) தஞ்சாவூர் மாவட்டம் மற்றும் மிஷன் ரேபிஸ், கோவா இணைந்து ‘ரேபிஸ் இல்லா தஞ்சாவூர்’ உருவாக்க, தஞ்சாவூர் மாவட்டத்தில் உள்ள அனைத்து சமுதாய நாய்கள் மற்றும் வளர்ப்பு நாய்களுக்கு இலவசமாக வெறிநோய் தடுப்பூசி மேற்கொள்ளும் திட்டமானது 19.05.2025 அன்று தொடங்கப்பட்டு தஞ்சாவூர் மாநகராட்சி பகுதிகளில் நாளது தேதி வரை 750 சமுதாய மற்றும் வளர்ப்பு நாய்களுக்கு வெறி நோய் தடுப்பூசி பணி மேற்கொள்ளப்பட்டுள்ளது எனவும், தஞ்சாவூர் மாநகராட்சியை தொடர்ந்து, கும்பகோணம் மாநகராட்சி நகராட்சிகள், பேரூராட்சிகள், ஊராட்சிகள் என படிப்படியாக மாவட்டம் முழுவதும் இத்திட்டம் விரிவுபடுத்த உள்ளது எனவும் தெரிவித்துள்ளார்கள். மேலும் பொதுமக்கள் அனைவரும் இத்திட்டத்திற்கு தங்களது முழு ஒத்துழைப்பையும் நல்கிடவும் கேட்டுக்கொண்டார்கள்.

இன்று உலக வெறிநோய் தினத்தில் தஞ்சாவூர் மாநகராட்சி வடக்கு வாசல் ராஜா கோரி பகுதியில் வெறி நோய் தடுப்பூசி சிறப்பு முகாம் நடைபெற்றது. இந்த உலக வெறிநோய் தின நிகழ்வில் மாநகர் நல அலுவலர் மருத்துவர் நமச்சிவாயம், கால்நடை பராமரிப்புத்துறை இணை இயக்குனர் மருத்துவர் பாஸ்கரன், உதவி இயக்குனர் மருத்துவர் சரவணன், மருத்துவர் ஏஞ்சலா சொர்ணமதி, பிராணிகள் வதை தடுப்பு சங்க ஒருங்கிணைப்பாளர் பொறியாளர் முத்துக்குமார், மருத்துவர் ஜனனி உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

நாளைய வரலாறு செய்திகளுக்காக

தஞ்சாவூர் செய்தியாளர்

–S. பாலமுருகன்

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Search

Recent Posts