
கோவை மாவட்டம் பொள்ளாச்சி வால்பாறைக்கு புதிதாக பதவி ஏற்ற வட்டாட்சியரை சமூக ஆர்வலர் P. பரமசிவம் நேரில் சந்தித்து நீண்ட நாள் நிலவும் சாலை மற்றும் அடிப்படை வசதி குறைகளை பற்றி மனு அளித்து வாழ்த்துக்களையும் தெரிவித்தார்.

நாளைய வரலாறு புலனாய்வு இதழின்,,,,
மேலும் பல முக்கிய காணொளி செய்திகள் காண,
Please Subscribe to This Channel to get current news ↓
https://www.youtube.com/channel/UCBXly8ucYf64DrK5QkzMOZQ

உபாசி, சோலையார், ஷேக்கல் முடி, மானாம்பள்ளி உள்ளிட்ட எஸ்டேட் பகுதிகளில் சாலைகள் மோசமான நிலையில் உள்ளதால் மக்கள் மருத்துவ சிகிச்சை பெறுவதும் வாகனங்கள் சீராக இயக்கப்படுவதும் கடுமையாக பாதிக்கப்படுவதாக கூறினார். பேருந்துகள் அடிக்கடி பழுதடைந்து நிர்வாகத்திற்கும் இழப்பீடு ஏற்படுவதாகவும், இதனால் பொதுமக்கள் கடும் சிரமத்தை எதிர்கொள்வதாகவும் மனுவில் கூறப்பட்டுள்ளது.
மேலும் எஸ்டேட் பகுதிகளில் மரங்கள் மற்றும் அடர்ந்த கிளைகள் வீடுகள் மீது விழும் அபாயம் நிலவுவதால் குறிப்பாக மழைக்காலங்களில் முதியோர், கர்ப்பிணி பெண்கள், சிறுவர்கள் அச்சத்தில் வாழ்ந்து வருவதாகவும் தெரிவிக்கப்பட்டது.
இதற்கான தீர்வாக சம்பந்தப்பட்ட சாலைகள் சீரமைப்பதற்கோ அல்லது அவற்றை அரசின் கீழ் கொண்டு வந்து துறை சார்ந்த அதிகாரிகள் மூலம் பழுது பார்க்க நடவடிக்கை எடுக்கவும் மரக்கிளைகளை அகற்ற சம்பந்தப்பட்ட துறைக்கு உத்தரவிடவும் பரமசிவம் கோரிக்கை வைத்தார்.
இதற்கு பதிலளித்த வட்டாட்சியர் மக்களின் அடிப்படை தேவைகளான சாலை பழுதுபார்ப்பு மற்றும் மரக்கிளைகள் அகற்றுதல் உள்ளிட்ட பணிகள் விரைவில் மேற்கொள்ளப்படும் என்று உறுதி அளித்தார்.
நாளைய வரலாறு செய்திகளுக்காக
-M.சுரேஷ்குமார்.












