
கோவை மாவட்டம் பொள்ளாச்சி தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டியைச் சேர்ந்த முத்துக்குமார கிருஷ்ணன் (35) அவரது மூத்த சகோதரி கே. முத்துலட்சுமி (45) மற்றும் இளைய சகோதரி எம். மீனாட்சி (36) ஆகியோர் வணிக ரீதியாகப் பெரும் கடன் சுமைக்கு ஆளாகியுள்ளனர்.

நாளைய வரலாறு புலனாய்வு இதழின்,,,,
மேலும் பல முக்கிய காணொளி செய்திகள் காண,
Please Subscribe to This Channel to get current news ↓
https://www.youtube.com/channel/UCBXly8ucYf64DrK5QkzMOZQ
கடனாளிகளிடம் இருந்து தப்பிக்கும் நோக்கில் ஒரு வாரத்திற்கு முன்பு இவர்கள் தாராபுரம் பகுதிக்கு குடியேறியுள்ளனர். அதன்பின் சில நாட்களுக்கு முன்பு பொள்ளாச்சி அருகே உள்ள பி.கே.எஸ் காலனியில் ஒரு வாடகை வீட்டிற்கு மாறி உள்ளனர்.
இந்நிலையில் வியாழக்கிழமை (செப்டம்பர் 25, 2025) மாலை மூவரும் தங்கள் வாடகை வீட்டில் பூச்சிக்கொல்லி மருந்தை அருந்தி தற்கொலைக்கு முயன்றுள்ளனர். இதை அறிந்த அக்கம் பக்கத்தினர் அவர்களை மீட்டு முதலில் பொள்ளாச்சி அரசு மருத்துவமனைக்குக் கொண்டு சென்றனர்.
அங்கு முதலுதவி அளிக்கப்பட்ட பின்னர் நிலைமை மோசமானதால் மூவரும் கோவை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு (CMCH) அனுப்பி வைக்கப்பட்டனர்.
அங்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்ட போதிலும் முத்துக்குமாரகிருஷ்ணன் மற்றும் முத்துலட்சுமி ஆகிய இருவரும் நேற்று (செப்டம்பர் 26, 2025) இரவு சிகிச்சை பலனின்றி அடுத்தடுத்து உயிரிழந்தனர்.மீனாட்சி தொடர்ந்து மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பெற்று வருகிறார்.
இந்தச் சம்பவம் குறித்து வழக்குப் பதிவு செய்துள்ள பொள்ளாச்சி காவல்துறையினர் கடன் தொகையின் அளவு மற்றும் தற்கொலைக்கான சரியான காரணங்கள் குறித்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
நாளைய வரலாறு செய்திகளுக்காக
உங்கள் செய்தியாளர்
-M.சுரேஷ்குமார்.












