
தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய் பங்கேற்ற பொதுக்கூட்டத்தில் ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கிப் பலர் உயிரிழந்த சம்பவம் தமிழகத்தை உலுக்கியுள்ளது.

நாளைய வரலாறு புலனாய்வு இதழின்,,,,
மேலும் பல முக்கிய காணொளி செய்திகள் காண,
Please Subscribe to This Channel to get current news ↓
https://www.youtube.com/channel/UCBXly8ucYf64DrK5QkzMOZQ

குழந்தைகள்,பெண்கள் உட்படப் பல அப்பாவி உயிர்கள் பறிபோன இத்துயரச் சம்பவம் மாநிலம் முழுவதும் பெரும் சோகத்தையும் துயரத்தையும் ஏற்படுத்தியுள்ளது.
நேற்று 27.09.25 சனிக்கிழமை கரூர் 100 அடிச் சாலையில் நடைபெற்ற இக்கூட்டத்தில் அனுமதி வழங்கப்பட்ட அளவை மீறிக் கட்டுக்கடங்காத கூட்டம் கூடியதே இந்த விபரீதத்துக்கு முக்கியக் காரணம் எனக் கூறப்படுகிறது.

தலைவர் விஜய் உரையை முடித்துவிட்டு வெளியேறியபோது ஏற்பட்ட கடுமையான நெரிசலில் சிக்கி 40 பேர் பலியாகினர். மேலும் பலர் காயமடைந்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
இச்சம்பவம் குறித்த விரிவான விசாரணைக்கு ஓய்வு பெற்ற உயர் நீதிமன்ற நீதிபதி அருணா ஜெகதீசன் தலைமையில் ஒரு நபர் விசாரணைக் குழுவை அமைத்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. மேலும் உயிரிழப்புக்குக் காரணமானவர்கள் மீது வழக்குகள் பதியப்பட்டு சட்ட நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

இத்துயரமான சூழலில் நாளைய வரலாறு குழுமம் உயிரிழந்தவர்களின் குடும்பத்தாருக்குத் தனது ஆழ்ந்த இரங்கலையும் கண்ணீரோடு கூடிய அஞ்சலியையும் தெரிவித்துக் கொள்கிறது.
தங்கள் அன்புக்குரியவர்களை இழந்து மீளாத துயரில் இருக்கும் குடும்பங்களுக்குத் தேவையான உதவிகளை அரசும் சமூகமும் வழங்க வேண்டும் என்று வேண்டி இறந்தவர்களின் ஆத்மா சாந்தியடைய எல்லாம் வல்ல இறைவனைப் பிரார்த்திக்கிறது.

நாளைய வரலாறு செய்திகளுக்காக
கண்ணீருடன் உங்கள் செய்தியாளர்
-M.சுரேஷ்குமார்.












