குறைதீர்க்கும் மனு கூட்டம் நடைபெற்றது!!

தூத்துக்குடி மாவட்டத்தில் பொதுமக்கள் குறைதீர்க்கும் மனு கூட்டம் வாரந்தோறும் ஒவ்வொரு புதன்கிழமைகளிலும் நடைபெறுவதை முன்னிட்டு மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு. ஆல்பர்ட் ஜான் இ.கா.ப அவர்கள் தலைமையில் குறைதீர்க்கும் மனு கூட்டம் நடைபெற்றது.

நாளைய வரலாறு புலனாய்வு இதழின்,,,,
மேலும் பல முக்கிய காணொளி செய்திகள் காண,
Please Subscribe to This Channel to get current news ↓
https://www.youtube.com/channel/UCBXly8ucYf64DrK5QkzMOZQ

தமிழ்நாடு காவல்துறை தலைமை இயக்குநர் அவர்கள் உத்தரவின்படி ஒவ்வொரு வாரமும் புதன்கிழமைதோறும் பொதுமக்கள் குறைதீர்க்கும் கூட்டம் தூத்துக்குடி மாவட்ட காவல்துறை அலுவலகத்தில் நடைபெற்று வருகிறது.

அதன்படி புதன் கிழமையான (10.09.2025) தூத்துக்குடி மாவட்டத்தில் காவல் நிலையங்களில் புகார் அளித்த 4 மனுதாரர்கள் மற்றும் புதிதாக மனு கொடுக்க வந்த 65 மனுதாரர்கள் என மொத்தம் 69 மனுதாரர்கள் தங்கள் குறைகளை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு. ஆல்பர்ட் ஜான் இ.கா.ப அவர்களிடம் நேரடியாக தெரிவித்து புகார் மனு அளித்தனர்.

பொதுமக்களின் குறைகளை கேட்டறிந்த மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அவர்கள் உடனடியாக விசாரணை மேற்கொண்டு நடவடிக்கை எடுக்குமாறு சம்மந்தப்பட்ட காவல்துறை அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார்.

வாரந்தோறும் புதன்கிழமைகளில் தூத்துக்குடி மாவட்ட காவல்துறை சார்பாக பொதுமக்கள் குறைதீரக்கும் மனு கூட்டம் மாவட்ட காவல் அலுவலகத்தில் நடைபெறும். இக்கூட்டத்தில் காவல் நிலையத்தில் அளிக்கப்பட்ட மனுக்களின் விசாரணையில் திருப்தி அடையாத புகார்தாரர்கள் நேரில் ஆஜராகி தங்களின் கருத்துக்களை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அவர்களிடம் தெரிவிக்கலாம் என்பதனை மாவட்ட காவல்துறை சார்பாக தெரிவித்துக்கொள்ளப்படுகிறது.

நாளைய வரலாறு செய்திகளுக்காக

செய்தியாளர்
-பரணி பாலா.

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Search

Recent Posts