
தூத்துக்குடி மாவட்டம், கோவில்பட்டி கல்யாணி திருமண மண்டபத்தில் வைத்து அதிமுக பூத் கமிட்டி நிர்வாகிகள் அனைவரையும் ஆன்லைனில் ஒருங்கிணைத்து அவர்களுக்கு பயிற்சி அளித்து தேர்தல் பணிகளில் ஈடுபட செய்வது உள்ளிட்டவை குறித்து ஆலோசனை கூட்டம் நடைபெற்றது.

நாளைய வரலாறு புலனாய்வு இதழின்,,,,
மேலும் பல முக்கிய காணொளி செய்திகள் காண,
Please Subscribe to This Channel to get current news ↓
https://www.youtube.com/channel/UCBXly8ucYf64DrK5QkzMOZQ

இக்கூட்டத்தில் சிறப்பு அழைப்பாளராக அதிமுக தூத்துக்குடி வடக்கு மாவட்ட செயலாளர், முன்னாள் அமைச்சர் கடம்பூர் ராஜூ எம்எல்ஏ கலந்து கொண்டு பூத் கமிட்டி நிர்வாகிகளுக்கு ஆன்லைன் பயிற்சி அளித்து பல்வேறு ஆலோசனைகளை வழங்கி சிறப்புரையாற்றினார். இந்நிகழ்வில் பூத் கமிட்டி பயிற்சி அளிக்க வருகை தந்த மேலிட மாவட்ட பொறுப்பாளர்கள் கருப்பசாமி, அருண்குமார்,பிரதீப், நகர செயலாளர் விஜயபாண்டியன், மாவட்ட இளைஞர் இளம்பெண்கள் பாசறை செயலாளர் எம்.ஆர்.வி.கவியரசன், மாவட்ட வர்த்தக அணி செயலாளர் இராமர், மாவட்ட மகளிரணி செயலாளர் பத்மாவதி, கனகசுந்தரம் ஒன்றிய செயலாளர் போடுசாமி, தகவல் தொழில்நுட்ப பிரிவு அண்ணாமலை, விக்னேஷ், ஜெயசிங், கெங்காராஜ், ராகுல் அம்பானி,சக்தீஸ்வரன், அதிசயகுமார் மற்றும் அதிமுக நிர்வாகிகள், பூத் கமிட்டி நிர்வாகிகள் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.
நாளைய வரலாறு செய்திகளுக்காக
கோவில்பட்டி செய்தியாளர்
– ராஜ்குமார்.












