
தூத்துக்குடி மாவட்டம், கோவில்பட்டி அருகே உள்ள இலுப்பையூரணி கைவண்டி தொழிலாளர் காலனியை சேர்ந்த ஆட்டோ டிரைவர் மாரிச் செல்வம் என்பவர் நேற்று சண்முகா நகர் சுடுகாட்டில் வெட்டி படுகொலை செய்யப்பட்டு சடலமாக கிடந்தார்.

நாளைய வரலாறு புலனாய்வு இதழின்,,,,
மேலும் பல முக்கிய காணொளி செய்திகள் காண,
Please Subscribe to This Channel to get current news ↓
https://www.youtube.com/channel/UCBXly8ucYf64DrK5QkzMOZQ
கோவில்பட்டி கிழக்கு காவல் நிலைய போலீசார் உடலை மீட்டு விசாரணை நடத்தி வந்தனர். இந்த கொலை வழக்கு தொடர்பாக அதே பகுதியைச் சேர்ந்த முருகன் மற்றும் அவரது 17 வயது மகன், மகனின் 17 வயது நண்பர் என மூன்று பேரை போலீசார் கைது செய்துள்ளனர்.
கோவிலில் பூஜை வைப்பது தொடர்பாக ஏற்பட்ட முன்விரோதம் காரணமாக ஆட்டோ டிரைவர் கொலை செய்யப்பட்டது விசாரணையில் தெரிய வந்துள்ளது. கொலை செய்ய முருகன் திட்டம் தீட்டி கொடுக்க, அவரது 17 வயது மகன் மற்றும், மகனின் 17 வயது நண்பர் இருவரும் சேர்ந்து ஆட்டோ டிரைவர் மாரிச் செல்வத்தை கொலை செய்ததாக, கைது செய்யப்பட்டவர்கள் போலீசாரிடம் கொடுத்துள்ள வாக்கு மூலத்தில் தெரிவித்துள்ளனர்.
நாளைய வரலாறு செய்திகளுக்காக
கோவில்பட்டி செய்தியாளர்
– ராஜ்குமார்.












