
தூத்துக்குடி மாவட்டம், கோவில்பட்டியில் உள்ள மிகவும் பிரசித்திப் பெற்ற
ஸ்ரீ மலையாளத்து சுடலை மகாராஜா கோயிலில் ஆவணி மாத கடைசி வெள்ளிக்கிழமையை முன்னிட்டு 18 வகையான வாசனை திரவியங்களால் சிறப்பு அபிஷேகம் நடைபெற்றது.

நாளைய வரலாறு புலனாய்வு இதழின்,,,,
மேலும் பல முக்கிய காணொளி செய்திகள் காண,
Please Subscribe to This Channel to get current news ↓
https://www.youtube.com/channel/UCBXly8ucYf64DrK5QkzMOZQ
தொடா்ந்து வண்ண மலா்களால் அலங்காரம் செய்யப்பட்டு தீபாராதனை காண்பிக்கப்பட்டது. பின்னா் சிறப்பு அலங்காரத்தில் ஸ்ரீ சுடலை மகாராஜா பக்தா்களுக்கு காட்சியளித்தாா். இரவு 8 மணிக்கு அலங்கார தீபாராதனையும், நள்ளிரவு 2 மணிக்கு படையல் தீபாராதனை மற்றும் சாமக்கொடை நடந்தது. ஸ்ரீ சங்கர் சுவாமி வேட்டைக்கு சென்று வந்து பக்தர்களுக்கு அருள் வாக்கு கூறினார். இதில் மதுரை, விருதுநகர், தூத்துக்குடி, திருநெல்வேலி, கன்னியாகுமரி, தென்காசி, உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் இருந்தும் பக்தா்கள் மற்றும் பொதுமக்கள் என ஏராளமானோர் கலந்து கொண்டனர். கலந்து கொண்ட அனைவருக்கும் பிரசாதம் வழங்கப்பட்டது.
நாளைய வரலாறு செய்திகளுக்காக
கோவில்பட்டி செய்தியாளர்
– ராஜ்குமார்.












