
அருள்மிகு பத்திரகாளியம்மன் திருக்கோயிலில் வருஷாபிஷேக விழா சிறப்பு வழிபாடுகளுடன் நடைபெற்றது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமி தாிசனம் செய்தனர்.

நாளைய வரலாறு புலனாய்வு இதழின்,,,,
மேலும் பல முக்கிய காணொளி செய்திகள் காண,
Please Subscribe to This Channel to get current news ↓
https://www.youtube.com/channel/UCBXly8ucYf64DrK5QkzMOZQ
வருஷாபிசேக விழா :
ஆண்டு தோறும் வருஷாபிஷேக விழா நடைபெறுவது வழக்கம். இந்த ஆண்டுக்கான வருஷாபிஷேகம் இன்று காலையில் நடைபெற்றது. இதற்காக அதிகாலை திருக்கோயில் நடை திறக்கப்பட்டு திருவனந்தல் காலை சந்தி பூஜைகள் நடைபெற்றது.
வருஷாபிஷேகம் :
தூத்துக்குடி மாவட்டம், கோவில்பட்டி நாடார் உறவின்முறை சங்கத்திற்குப் பாத்தியப்பட்ட அருள்மிகு ஸ்ரீ பத்திரகாளியம்மன் திருக்கோவிலில் நிகழும் மங்களகரமான 1201ம் ஆண்டு விசுவாவசு வருடம் ஆவணி மாதம் 25ம் தேதி புதன்கிழமை ரேவதி நட்சத்திரமும், திருதியை திதியும், அமிர்தயோகமும் கூடிய சுபயோக சுபதினத்தில் காலை 9 மணிக்கு மேல் 10 மணிக்குள் கும்ப லக்னத்தில் வருஷாபிஷேகம் நடைபெற்றது.
ஹோம பூஜை :
காலை 6 மணிக்கு
அனுக்ஞை, விக்னேஷ்வர பூஜை, புண்ணியாக வாசனம்,
ஸ்ரீ மகா கணபதி ஹோமம், ஸ்ரீ சக்தி ஹோமம், பரிவார மூர்த்திகளுக்கு மூல மந்த்ர ஹோமம், அஸ்திர ஹோமம், திராவ்யாகுதி, பூரணாகுதி, தீபாராதனை நடைபெற்றது.
காலை 9 மணிக்கு மேல் 10 மணிக்குள் கும்பங்கள் எழுந்தருளல், விமான கோபுரங்கள் அபிஷேகம், மூலஸ்தான கும்ப அபிஷேகம்
நடைபெற்றது. இதனைத் தொடர்ந்து யாக சாலையில் வைத்து சிறப்பு வழிபாடு நடத்தப்பட்ட புனித நீர் குடங்கள் மேளதாளத்துடன் கலசங்களை சிவாச்சாரியார்கள் தலையில் சுமந்தவாறு வலம் வந்தனர்.
மகா தீபாராதனை :
தொடர்ந்து மூலஸ்தானத்தில் சிறப்பு அபிஷேகம் மற்றும் அலங்காரம் மகா தீபாராதனைகள் நடைபெற்றது. இந்த விழாவில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர்.
அம்மன் வீதி உலா :
இரவு 7 மணியளவில் ஸ்ரீ பத்திரகாளியம்மன் வெள்ளி சிம்ம வாகனத்தில் வெள்ளிக் குடையின் கீழ் வீதி உலா நடைபெறுகிறது.
மதியம் 12 மணிக்கு திருக்கோவில் கலையரங்கத்தில் பக்தர்களுக்கு சிறப்பு அன்னதானம் வழங்கப்பட்டது. இதற்கான ஏற்பாடுகளை திருக்கோவில் விழா குழுவினர் சிறப்பாக செய்திருந்தனர்.
நாளைய வரலாறு செய்திகளுக்காக
கோவில்பட்டி செய்தியாளர்
– ராஜ்குமார்.












