சிறப்பான முறையில் அண்ணா பிறந்தநாள் அதிமுக கட்சியின் சார்பாக நடைபெற்றது!!

கோவை மாவட்டம் பொள்ளாச்சி வட்டாரம் வால்பாறை : தமிழகத்தின் விடிவெள்ளி அறிஞர் அண்ணா அவர்களின் 117 ஆம் ஆண்டு பிறந்தநாள் மிகவும் சிறப்பான முறையில் அதிமுக நகரக் கழக சார்பாக மாலை அணிவித்து இனிப்பு வழங்கி கொண்டாடினார்கள். பொதுமக்கள், வியாபாரிகள், வாகன ஓட்டுனர்கள் அனைவரும் கலந்துக் கொண்ட இந்த நிகழ்ச்சி வால்பாறை அருள்மிகு சுப்பிரமணி சாமி திருக்கோவிலின் முன்பாக உள்ள அண்ணா சிலைக்கு முன்பாக நடைபெற்றது.

நாளைய வரலாறு புலனாய்வு இதழின்,,,,
மேலும் பல முக்கிய காணொளி செய்திகள் காண,
Please Subscribe to This Channel to get current news ↓
https://www.youtube.com/channel/UCBXly8ucYf64DrK5QkzMOZQ

இதில் பங்கேற்றவர் நகர கழக செயலாளர் உயர்திரு மயில்கணேஷ் ஆலோசனைப்படி பொன் கணேஷ் முன்னிலையில் நடைபெற்றது. இதில் வர்த்தக அணி செயலாளர் சண்முகவேல், வழக்கறிஞர் பிரிவு செயலாளர் திரு ஆர் பெருமாள், ஐ டி வி செயலாளர் சண்முகம், 17 வது வார்டு கவுன்சிலர் மணி, இளைஞரணி ஆர் சசிகுமார், நகர வார்டு செயலாளர் எம் ஆர் எஸ் மோகன், கக்கன் காலனி ரகு வாழைத்தோட்டம், சாந்தி தேவரளி சுரேஷ், இரும்பு கடை ரவி தமிழக அரசு ராஜமாணிக்கம், சோலையார் பெரியசாமி அவர்கள் கலந்து கொண்டு சிறப்பான முறையில் நடைபெற்றது.

பொதுமக்களும் கலந்து கொண்டு இந்த நிகழ்ச்சி சிறப்பித்தனர்.

நாளைய வரலாறு செய்திகளுக்காக

வால்பாறையில் இருந்து

-திவ்யக்குமார்.

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Search

Recent Posts