செட்டிபாளையம் சங்கம் நகரில் கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது..!!

கோவை மாவட்டம் செட்டிபாளையம் சங்கமம் நகரில் நேற்று காலை 9 மணி அளவில் கோவை கிணத்துக்கடவு செட்டிபாளையம் பேரூராட்சியில் உள்ள 1வார்டு சங்கமம் நகர் பகுதியில் அடிப்படை பிரச்சனையான தார் சாலை மின்விளக்கு குடிநீர் மற்றும் தெரு நாய் தொந்தரவு உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி கவனயீர்ப்பு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

நாளைய வரலாறு புலனாய்வு இதழின்,,,,
மேலும் பல முக்கிய காணொளி செய்திகள் காண,
Please Subscribe to This Channel to get current news ↓
https://www.youtube.com/channel/UCBXly8ucYf64DrK5QkzMOZQ

இந்த கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டத்தை சங்கமம் குடியிருப்போர் நல் வாழ்வு சங்கத்தின் சார்பாக தலைவர் முருகானந்தம், செயலாளர் அப்துல் ரஹீம், பொருளாளர் ஆல்பர்ட், துணைத் தலைவர் சையது இப்ராஹிம், இணைச் செயலாளர் சதீஷ் தலைமையில் நடைபெற்றது.

இதில் 200க்கும் மேற்பட்ட ஊர் பொது மக்கள் கலந்து கொண்டனர். கோஷங்கள் எழுப்பினர் போராட்டத்தில் முடிவில் பேரூராட்சி தலைவர் ரங்கசாமி அவர்கள் பகுதியின் குறைகளை கேட்டு அறிந்து விரைவில் முடித்து கொடுப்பதாக பொதுமக்களின் உறுதி அளித்துள்ளார்.

தகவல் தெரிந்தவுடன் செட்டிபாளையம் காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு வந்தனர். இதனை செட்டிபாளையம் காவல் துறை ஆய்வாளர் இளவேந்தன் அவர்கள் மற்றும் காவல் துறையினர் பொதுமக்களுக்கிடையே பேச்சுவார்த்தை செய்து முடித்து வைத்தார். பிறகு பொதுமக்கள் அங்கிருந்து கடந்து சென்றனர்.

நாளைய வரலாறு செய்திகளுக்காக

தலைமை நிருபர்

-ஈசா.

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Search

Recent Posts