
கோவை மாவட்டம் வால்பாறை தமிழ்நாடு சிறார் எழுத்தாளர்கள் கலைஞர்கள் சங்கத்தின் புதிய கிளை வால்பாறை ஊராட்சி ஒன்றிய ஆரம்பப் பள்ளியில் இன்று தொடங்கப்பட்டது. இந்த அமைப்பின் தொடக்கவிழாவிற்கு தமிழ்நாடு சிறார் எழுத்தாளர்கள் சுனில் லால், மஞ்ஞாலுமூடு தலைமை தாங்கினர். ஆசிரியர் அழகு ராணி அனைவரையும் வரவேற்றார். புதிய கிளையின் நிர்வாகிகளாக, தலைவர் அருண்பாண்டி, செயலாளர் அருணா, மற்றும் பொருளாளர் அருள்ஜோதி ஆகியோர் ஏகமனதாக தேர்ந்தெடுக்கப்பட்டனர். இவர்களுடன் ஆறு பேர் கொண்ட செயற்குழு உறுப்பினர்களும் தேர்வு செய்யப்பட்டனர்.

தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் கலைஞர்கள் சங்கத்தின் சார்பாக எழுத்தாளர் கா. சி. தமிழ்க்குமரன் வாழ்த்துரை வழங்கினார். தமிழ்நாடு சிறார் எழுத்தாளர்கள் கலைஞர்கள் சங்கத்தின் மாநில தலைவரும், பால சாகித்ய புரஸ்கார் விருது பெற்றவருமான எழுத்தாளர் உதயசங்கர் சங்கத்தின் நோக்கங்கள் குறித்து சிறப்புரையாற்றினார். கிளையின் செயலாளர் அருணா, சங்கத்தின் எதிர்கால திட்டங்களை எடுத்துரைத்தார். தலைவர் அருண்பாண்டி நன்றியுரை வழங்கினார். இந்த நிகழ்ச்சியில் ஆசிரியர்களும், இல்லம் தேடிக் கல்வி தன்னார்வலர்களும் பெருமளவில் கலந்து கொண்டனர்.நாளைய வரலாறு புலனாய்வு இதழின்,,,,
மேலும் பல முக்கிய காணொளி செய்திகள் காண,
Please Subscribe to This Channel to get current news ↓
https://www.youtube.com/channel/UCBXly8ucYf64DrK5QkzMOZQ
P. பரமசிவம், வால்பாறை.











