பொள்ளாச்சி ஆனைமலைப் பகுதிகளில் தொடர்கதை அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க சமூக ஆர்வலர்கள் கோரிக்கை!!
கோவை மாவட்டம் பொள்ளாச்சி மற்றும் ஆனைமலை சுற்று வட்டாரப் பகுதிகளில்
ஒரு சில பத்திரிகையாளர்கள் என்ற பெயரில் சிலர் அரசு அதிகாரிகளிடம் குறிப்பாக வருவாய்த் துறை அலுவலர்களிடம் பத்திரிகைகள் மற்றும் புத்தகங்களை வைத்துக்கொண்டு அதிக விலைக்கு விற்று வசூல் வேட்டையில் ஈடுபட்டு வருவதாகச் சமூக ஆர்வலர்கள் குற்றம் சாட்டியுள்ளனர்
மாத இதழ் ஒன்று ₹10-க்கு விலை நிர்ணயிக்கப்பட்டிருந்தாலும் அதை ₹500 முதல் ₹1,000 வரை வற்புறுத்தி அதிகாரிகளிடம் விற்பனை செய்வதாகவும், அதேபோல் ₹5 மதிப்புள்ள தினசரி பேப்பர்களைக் கொடுத்து அதிக தொகையைக் கறப்பதாகவும் கூறப்படுகிறது.

நாளைய வரலாறு புலனாய்வு இதழின்,,,,
மேலும் பல முக்கிய காணொளி செய்திகள் காண,
Please Subscribe to This Channel to get current news ↓
https://www.youtube.com/channel/UCBXly8ucYf64DrK5QkzMOZQ
இந்தப் போக்கு நேர்மையாகப் பணிபுரியும் அரசு அலுவலர்களுக்கு மன உளைச்சலை ஏற்படுத்துவதாக சமூக ஆர்வலர்கள் தெரிவிக்கின்றனர்.
தீபாவளி பண்டிகைகளில் படையெடுப்பு:
இது மட்டுமின்றி வரவிருக்கும் தீபாவளி போன்ற பண்டிகைக் காலங்களில் இதே போன்று செயல்படும் சில பத்திரிகையாளர்கள் குழுவாகச் சென்று அரசு அதிகாரிகளிடமும் அரசியல்வாதிகளிடமபணமாகவும், பட்டாசு, இனிப்புப் பெட்டிகளாகவும் வற்புறுத்திப் பரிசுகளைப் பெற்றுச் செல்வதாகவும் குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளன.
உண்மையான பத்திரிகைத் தர்மத்துக்கு முரணான இந்தச் செயல்கள் பொதுமக்களிடையே பத்திரிகை துறையின் மீதான நம்பிக்கையைக் குலைப்பதாக சமூக ஆர்வலர்கள் வேதனை தெரிவிக்கின்றனர்.
காவல்துறை நடவடிக்கை கோரிக்கை:
இதுபோன்ற சட்டவிரோதப் பண வசூலில் ஈடுபடும் ஒரு சிலரையும் காவல்துறை அதிகாரிகள் தீவிரமாகக் கண்காணிக்க வேண்டும் என்றும், இந்தப் பெயரைக் கெடுக்கும் செயல்களில் ஈடுபடும் நபர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் சமூக ஆர்வலர்கள் சார்பில் கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது. இந்தக் கோரிக்கையின் மூலம் நேர்மையற்ற செயல்களில் ஈடுபடுவோர் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்ற எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.
நாளைய வரலாறு செய்திகளுக்காக
உங்கள் செய்தியாளர்
-M.சுரேஷ்குமார்.













