துறைமுகத்தில் பார்ஜ் படகில் வெல்டிங் பணிக்காக சென்ற 3பேர் மூச்சு திணறி உயிரிழப்பு!!

தூத்துக்குடி துறைமுகத்தில் பார்ஜ் படகில் வெல்டிங் பணிக்காக சென்ற 3பேர் மூச்சு திணறி உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

நாளைய வரலாறு புலனாய்வு இதழின்,,,,
மேலும் பல முக்கிய காணொளி செய்திகள் காண,
Please Subscribe to This Channel to get current news ↓
https://www.youtube.com/channel/UCBXly8ucYf64DrK5QkzMOZQ

தூத்துக்குடி பழைய துறைமுகத்தில் டெக்போர்ட் இழுத்து செல்லும் பார்ஜ் என்னும் படகின் கீழ் தளத்தில் வெல்டிங் பணி 3பேர் இறங்கியுள்ளனர். அவர்கள் நீண்ட நேரமாகியும் அவர்கள் திரும்பி வராததால் அவர்கள் அங்கு மாட்டிக் கொண்டதாக தெரியவந்துள்ளது. இதையடுத்து தூத்துக்குடி தீயணைப்பு நிலையத்திற்கு தகவல் தெரிவிக்கபட்டது.

மாவட்ட அலுவலர் கணேசன் தலைமையில் நிலைய உதவி மாவட்ட அலுவலர் மற்றும் பணியாளர்கள் விரைந்து சென்று மீட்பு பணியில் ஈடுபட்டனர். நீண்ட நேரம் போராடி அவர்களை மீட்டு துறைமுக ஆம்புலன்ஸ் மூலம் அரசு மருத்துவமனை அனுப்பி வைத்தனர். ஆனால் அவர்கள் மருத்துவமனை செல்லும் வழியிலேயே உயிரிழந்தனர்.

இறந்தவர்கள் ராஜஸ்தான் சந்திப் குமார் (22), திருநெல்வேலி மாவட்டம் உவரியைச் சேர்ந்த ரோன் சார்ஜ் (25), தூத்துக்குடி மாவட்டம் புன்னக்காயல் பகுதியைச் சேர்ந்த ஜெனிஸ்டன் தாமஸ் (35) என்பதும், போதிய ஆக்ஸிஜன் கிடைக்காததால் அவர்கள் இறந்ததும் தெரியவந்தது. இந்த சம்பவம் குறித்து தூத்துக்குடி மரைன் காவல் நிலைய இன்ஸ்பெக்டர் பேச்சிமுத்து வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார். இந்த சம்பவம் தூத்துக்குடியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

நாளைய வரலாறு செய்திகளுக்காக

செய்தியாளர்
-பரணி பாலா.

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Search

Recent Posts