தூத்துக்குடி மாவட்டம் ஆத்தூர் தாமிரபரணி ஆற்று பாலம் சீரமைக்கப்படுமா? மக்கள் பயன்பாட்டுக்கு வருமா? பாட்டாளி மக்கள் கட்சி மாவட்ட செயலாளர் நெப்போலியன் சுப்பையா மாவட்ட ஆட்சியரிடம் மனு!!

தூத்துக்குடி மாவட்டம் ஆத்தூர் தாமிரபரணி ஆத்துப்பாலம் பல கோடியில் கட்டப்பட்ட இந்த பாலம் 2023 மழை வெள்ளத்தில் ஒன்பதாவது தூண் இறங்கியதால் பாலம் தொட்டில் மாதிரி இறங்கி விட்டது.

நாளைய வரலாறு புலனாய்வு இதழின்,,,,
மேலும் பல முக்கிய காணொளி செய்திகள் காண,
Please Subscribe to This Channel to get current news ↓
https://www.youtube.com/channel/UCBXly8ucYf64DrK5QkzMOZQ

இதனால் போக்குவரத்து நிறுத்தப்பட்டு ஆத்தூர் பழைய பாலத்தில் போக்குவரத்துக்காக பயன்படுத்தப்பட்டது. இந்த பாலத்தில் எதிரெதிரே வாகனங்கள் வருவதால் விபத்துக்கள் நடைபெற அதிக வாய்ப்பு இருக்கிறது.

இந்த விபத்தை தடுத்திட பலமுறை மாவட்ட ஆட்சியரிடம் மனுக்கள் கொடுத்தும் பாலம் சரி செய்யப்படவில்லை. கேட்டால் பணம் ஒதுக்கி இருப்பதாக கூறுகிறார்கள். ஆனால் இன்று வரை பாலம் சரி செய்யப்படவில்லை.

உடனடியாக பழுதடைந்த பாலத்தை சீரமைத்து பொதுமக்கள் பயன்பாட்டிற்கு கொண்டுவர பாட்டாளி மக்கள் கட்சி சார்பாக தெற்கு மாவட்ட செயலாளர் நெப்போலியன் சுப்பையா மாவட்ட ஆட்சியரிடம் கோரிக்கை மனு அளித்துள்ளார்

நாளைய வரலாறு செய்திகளுக்காக

செய்தியாளர்
-பரணி பாலா.

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Search

Recent Posts