பழுதடைந்த மின் கம்பம்; அச்சத்தில் பொதுமக்கள்!!

தூத்துக்குடி மாவட்டம், கோவில்பட்டி அருள்தரும் ஸ்ரீ செண்பகவல்லி அம்மன் கோவில் முன்புறம் அமைந்துள்ள மின் கம்பம் பழுதடைந்து எந்த நேரத்திலும் உடைந்து விழும் நிலையில் உள்ளதால், பொதுமக்கள் அச்சத்தில் உள்ளனர்.

நாளைய வரலாறு புலனாய்வு இதழின்,,,,
மேலும் பல முக்கிய காணொளி செய்திகள் காண,
Please Subscribe to This Channel to get current news ↓
https://www.youtube.com/channel/UCBXly8ucYf64DrK5QkzMOZQ

மின் வாரிய அலுவலர்கள் முறையாக மின் கம்பத்தை பராமரிக்காததால், தற்போது மின் கம்பம் பழுதடைந்துள்ளது. இங்குள்ள பெருமாள் கோவில் தெருவில், 50க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசிக்கின்றனர். மின் வாரிய நிர்வாகம், தெருவோரம் மின் கம்பம் அமைத்து, அதன் மூலம் வீடுகளுக்கு மின் இணைப்பு வழங்கப்பட்டுள்ளது.

மின் வாரிய அலுவலர்கள் முறையாக மின் கம்பத்தை பராமரிக்காததால், தற்போது, மின் கம்பம் பழுதடைந்துள்ளது.குறிப்பாக தரைப்பகுதியில் சிமென்ட் தளம் பெயர்ந்து, வெறும் இரும்பு கம்பிகள் மட்டுமே உள்ளன. இந்த தெரு வழியில், 24 மணி நேரமும் பொது மக்கள் மற்றும் இருசக்கர வாகன ஓட்டிகள் சென்றவாறு இருப்பர்.சில மாதமாக மின்கம்பம் பழுதடைந்தும்,எந்த நேரத்திலும் உடைந்து விழும் நிலையில் உள்ளதால், மின்வாரிய அதிகாரிகள் மின்கம்பத்தை மாற்றாமல் மெத்தனம் காட்டி வருகின்றனர்.

பழுதடைந்த மின் கம்பத்தை மாற்றி தர வேண்டும் என, மின்வாரிய அதிகாரிகளிடம் கடந்த (22.8.25) அன்று தொலைபேசி மூலமாக இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் நகர செயலாளர் K.செந்தில் ஆறுமுகம்
தகவல் தெரிவித்தும், இதுவரை எவ்வித நடவடிக்கையும் இல்லை. இந்த மின்கம்பம் உடைந்தால், உயிர் சேதம் ஏற்படுவதுடன், கோவில் மற்றும் அதனை சுற்றி மின் சப்ளை முழுவதுமாக துண்டிக்கப்படும். எனவே, இனியாவது மின் வாரிய அதிகாரிகள் உடனடியாக நடவடிக்கை எடுத்து, மின் கம்பத்தை மாற்றித் தர வேண்டும் என இந்திய கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் நகர செயலாளர் K.செந்தில் ஆறுமுகம் தலைமையில் மனு அளித்தனர். இதில் நகர உதவி செயலாளர்கள் விஜயலட்சுமி, அலாவுதீன் மற்றும் சங்கர்,மாரியப்பன்,முத்து,ராஜா ஆகியோர் உடனிருந்தனர்.

நாளைய வரலாறு செய்திகளுக்காக

கோவில்பட்டி செய்தியாளர்

-ராஜ்குமார்.

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Search

Recent Posts