
தூத்துக்குடி மாவட்டம், கோவில்பட்டி அருகே வடக்கு கோனார் கோட்டை கிராமத்தில் உள்ள மிகவும் பழமையான அருள்மிகு ஸ்ரீ சித்தி விநாயகர், ஸ்ரீ கொம்மண்டி அம்மன் திருக்கோவில் அஷ்டபந்தன மகா கும்பாபிஷேக விழா வெகுவிமரிசையாக மூன்று நாட்கள் யாக காலப் பூஜைகளுடன் நடைப்பெற்று வந்தது.

நாளைய வரலாறு புலனாய்வு இதழின்,,,,
மேலும் பல முக்கிய காணொளி செய்திகள் காண,
Please Subscribe to This Channel to get current news ↓
https://www.youtube.com/channel/UCBXly8ucYf64DrK5QkzMOZQ
இவ்விழாவின் முக்கிய நிகழ்வான வியாழக்கிழமை அதிகாலை முதல் கணபதி ஹோமம், வாஸ்த்து ஹோமம், நவக்கிரக ஹோமம், கும்பகலச ஹோமம், பூர்ணாதி ஹோமம் உள்ளிட்ட பல்வேறு யாகப் ஹோமங்களும் நடைப்பெற்றது. பின்னர் மேளத்தாளங்களுடன் புன்னிய நதிகளில் இருந்து எடுத்து வரப்பட்ட புனித நீரினை ஊர்வலமாக எடுத்து வரப்பட்டு ஸ்ரீ கொம்மண்டி அம்மன் திருக்கோவிலின் விமான கலசங்களுக்கு மங்கள வாத்தியங்கள் முளங்க சிவாச்சாரியர்கள் புனித நீரினை ஊற்றி மஹா கும்பாபிஷேகம் செய்து பத்தர்களுக்கு தீர்த்த பிரசாதம் தெளிக்கப்பட்டது.
இதனைத் தொடர்ந்து கோவிலில் வீற்றுருக்கும் ஸ்ரீ கொம்மண்டி அம்மனுக்கு சிறப்பு அபிஷேகங்களும், கற்பூர தீபாராதனைகளுடன் சிறப்பு அலங்கார தீபாராதனை நடைப்பெற்றது. பின்னர் சிறப்பு அலங்காரத்துடன் பக்தர்களுக்கு காட்சியளித்த ஸ்ரீ கொம்மண்டி அம்மனை ஏராராளமான பக்தர்கள் தரிசனம் செய்து வழிப்பட்டனர்.
இதில் கோவில் தர்மகர்த்தா மற்றும் ஊர் பொதுமக்கள் அழைப்பின் பேரில் சிறப்பு விருந்தினராக மாவட்ட கவுன்சிலர் பிரியா குருராஜ் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தார். கோனார் கோட்டை பொதுமக்கள் மற்றும் கோவில் நிர்வாகிகள் மாலை அணிவித்து சிறப்பான வரவேற்பு அளித்தார்கள். அதனைத் தொடர்ந்து நடைபெற்ற அன்னதான நிகழ்ச்சிக்கு மாவட்ட கவுன்சிலர் பிரியா குருராஜ் நிதி உதவி வழங்கினார்.
இந்நிகழ்சியில் செட்டிகுறிச்சி பஞ்சாயத்து தலைவர் கிருஷ்ணசாமி, ஓலைகுளம் திமுக இளைஞரணி மணிகண்டன், கோனார் கோட்டை வெள்ளத்துரை, ராஜா புதுக்குடி பால்ராஜ், திமுக கிளை கழக செயலாளர் முருகன் மற்றும் சுற்றுவட்டார பொதுமக்கள், இளைஞர்கள் உள்பட திரளானோர் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர்.
இந்த விழாவிற்கான ஏற்பாடுகளை ஸ்ரீ கொம்மண்டி அம்மன் திருக்கோவில் நிர்வாகத்தினர் சிறப்பாக செய்திருந்தனர். பின்னர் அனைத்து பக்தர்களுக்கும் அறுசுவை உணவுகளும் வழங்கப்பட்டது.
நாளைய வரலாறு செய்திகளுக்காக
கோவில்பட்டி செய்தியாளர்
– ராஜ்குமார்.












