புறக்காவல் நிலையத்தை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ரிப்பன் வெட்டி திறந்து வைத்தார்!!

தூத்துக்குடி மாவட்டம்: 13.09.2025

*காவல்துறை சார்பாக புதிதாக அமைக்கப்பட்ட புறக்காவல் நிலையத்தை இன்று மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அவர்கள் ரிப்பன் வெட்டி திறந்து வைத்தார்.*

*தூத்துக்குடி வடபாகம் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட மாதவன்நாயர் காலனி கடற்கரை பகுதியில் காவல்துறை சார்பாக புதிதாக அமைக்கப்பட்ட புறக்காவல் நிலையத்தை இன்று (13.09.2025) மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு. ஆல்பர்ட் ஜான் இ.கா.ப அவர்கள் ரிப்பன் வெட்டி திறந்து வைத்தார்.*

நாளைய வரலாறு புலனாய்வு இதழின்,,,,
மேலும் பல முக்கிய காணொளி செய்திகள் காண,
Please Subscribe to This Channel to get current news ↓
https://www.youtube.com/channel/UCBXly8ucYf64DrK5QkzMOZQ

*அப்போது மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பேசுகையில், பொதுமக்களின் நீண்ட நாள் கோரிக்கையை ஏற்று தற்போது இப்பகுதியில் புதிதாக புறக்காவல் நிலையம் திறக்கப்பட்டுள்ளது. இதன்மூலம் பொதுமக்கள் தங்களது புகார்களை அளித்து தங்களது குறைகளை இங்கு நிவர்த்தி செய்து கொள்ளாலம் என்று தெரிவித்தார்.*

*இந்நிகழ்வின் போது தூத்துக்குடி நகர உட்கோட்ட காவல் உதவி கண்காணிப்பாளர் டாக்டர் சி. மதன் இ.கா.ப, வடபாகம் காவல் நிலைய ஆய்வாளர் திரு. பாலமுருகன் உட்பட காவல்துறையினர் மற்றும் பொதுமக்கள் உடனிருந்தனர்.*

நாளைய வரலாறு செய்திகளுக்காக

செய்தியாளர்

-பரணி பாலா.

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Search

Recent Posts