
கோவை மாவட்டம் பொள்ளாச்சி அருகே இன்று அதிகாலை அரசுப் பேருந்து ஒன்று சாலையோரம் நின்றிருந்த டேங்கர் லாரி மீது மோதிய விபத்தில் பேருந்தின் நடத்துனர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.

நாளைய வரலாறு புலனாய்வு இதழின்,,,,
மேலும் பல முக்கிய காணொளி செய்திகள் காண,
Please Subscribe to This Channel to get current news ↓
https://www.youtube.com/channel/UCBXly8ucYf64DrK5QkzMOZQ

மேலும் பேருந்தில் பயணித்த 30 பயணிகள் லேசான காயங்களுடன் உயிர் தப்பினர்.
இன்று அதிகாலை சுமார் 3 மணியளவில் கோவையிலிருந்து திண்டுக்கல் நோக்கி 30 பயணிகளுடன் அரசுப் பேருந்து ஒன்று சென்று கொண்டிருந்தது.
பொள்ளாச்சி அருகே ஆச்சிபட்டி என்ற இடத்தில், சாலையோரம் நின்றிருந்த டேங்கர் லாரி மீது எதிர்பாராத விதமாக பேருந்து மோதியது.
இந்த விபத்தில், பேருந்தின் முன் பகுதி பலத்த சேதமடைந்தது. பேருந்தின் நடத்துனரான திண்டுக்கல் மாவட்டம் குஜிலம்பாரை பகுதியைச் சேர்ந்த பாலசுப்பிரமணி (44), விபத்து நடந்த இடத்திலேயே உயிரிழந்தார்.
பேருந்தில் பயணித்த மற்ற 30 பயணிகளும் லேசான காயங்களுடன் பொள்ளாச்சி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
இந்த விபத்து குறித்து பொள்ளாச்சி தாலுகா போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
நாளைய வரலாறு செய்திகளுக்காக
உங்கள் செய்தியாளர்
-M.சுரேஷ்குமார்.











