
புதுக்கோட்டை மாவட்டம் கந்தர்வகோட்டை ஒன்றியம் அக்கச்சிப்பட்டி ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில் செப்டம்பர் மாதத்திற்கான துளிர் இதழ் வாசிப்பு நிகழ்வு (செப் 22) நடைபெற்றது.

நாளைய வரலாறு புலனாய்வு இதழின்,,,,
மேலும் பல முக்கிய காணொளி செய்திகள் காண,
Please Subscribe to This Channel to get current news ↓
https://www.youtube.com/channel/UCBXly8ucYf64DrK5QkzMOZQ
தமிழ்நாடு அறிவியல் இயக்கம் கடந்த நாற்பது ஆண்டுகளுக்கு மேலாக துளிர் அறிவியல் திறனறிவுத் தேர்வு நடத்தி வருகின்றனர். துளிர் திறனறிவுத் தேர்வில் கலந்து கொள்ளும் மாணவர்களுக்கு மாதம் தோறும் விஞ்ஞான துளிர் என்ற மாத இதழ் வழங்கப்படுகிறது. தமிழ்நாடு அறிவியல் இயக்கம் நடத்தும் துளிர் திறனறிவுத் தேர்வு எதிர்காலத்தில் போட்டித் தேர்வு எழுதுவதற்கு முன்னோடி தேர்வாக இருக்கும். செப்டம்பர் மாத விஞ்ஞான துளிர் இதழில் வெளிவந்துள்ள கட்டுரைகளை மாணவ, மாணவிகள் வாசித்தனர்.
கட்டுரைகளாக ‘பனிப்பாறைகள் ஏன் உருவாகின்றன‘ என்ற தலைப்பில் ரிதன்யா மாறன் என்ற மாணவியும், ‘பிரபஞ்ச வேகவிதிக்கு ஒரு விதி விலக்கு’ என்ற தலைப்பில் சுபிக்ஷா என்ற மாணவியும்,’சார்லஸ் குட் இயர் முயற்சி’ என்ற தலைப்பில் கஜோல் என்ற மாணவியும், ‘தளராத மனிதர்’ என்ற தலைப்பில் லாவண்யா என்ற மாணவியும், ‘மனிதனின் மொழித்திறன்’ என்ற தலைப்பில் பூஜாஸ்ரீ என்ற மாணவியும், ‘முழுச் சந்திர கிரகணம்‘ என்ற தலைப்பில் கிஷோர் என்ற மாணவனும், ‘ஏ ஐ தொழில்நுட்பம்’ என்ற தலைப்பில் தவஸ்ரீ என்ற மாணவியும் , ‘விலங்குகளால் பால்பண்பை மாற்றிக்கொள்ள முடியுமா?’ உங்கள் தலையில் ஒரு நேரம் ,கால்களில் ஒரு நேரம் கிறிஸ்டியன் டாப்ளர் என்ற தலைப்பில் முகேஷ் என்ற மாணவரும் வாசித்தனர்.
மேற்கண்ட தலைப்புகளில் மாணவர்கள் துளிர் இதழை வாசித்து தங்களுடைய கருத்துக்களை பதிவு செய்தனர். மாணவர்களின் அறிவியல் மனப்பான்மையை வளர்க்கும் மாத இதழாக விஞ்ஞான துளிர் இதழ் ஒவ்வொரு மாதமும் வெளிவந்து கொண்டிருக்கிறது அனைவரும் வாங்கி வாசிக்க வேண்டும் என அறிவுரை வழங்கப்பட்டது.
இந்நிகழ்வினை தமிழ்நாடு அறிவியல் இயக்க கந்தர்வ கோட்டை ஒன்றிய செயலாளரும், அறிவியல் பட்டதாரி ஆசிரியர் ரகமதுல்லா ஒருங்கிணைத்தார்.
நாளைய வரலாறு செய்திகளுக்காக
-ஈசா.











