திருப்பூர் மாநகர காவல்துறை சார்பாக காவலர் தினம் சிறப்பாகக் கொண்டாடப்பட்டது!!

திருப்பூர் மாநகர காவல் துறையின் பத்திரிக்கை செய்தி.

முதன்முதலாக 1859 ஆம் ஆண்டு மெட்ராஸ் மாவட்ட காவல் சட்டம் நிறைவேற்றப்பட்டதன் மூலம், நவீன மற்றும் அமைப்பு ரீதியான காவல்துறை தோற்றுவிக்கப்பட்டது. இதை நினைவுகூரும் வகையில் செப்டம்பர் 6 ஆம் தேதி காவல் துறையினருக்கு இந்நாள் முக்கிய நாளாகும்.

நாளைய வரலாறு புலனாய்வு இதழின்,,,,
மேலும் பல முக்கிய காணொளி செய்திகள் காண,
Please Subscribe to This Channel to get current news ↓
https://www.youtube.com/channel/UCBXly8ucYf64DrK5QkzMOZQ

இந்த ஆண்டு முதல் தமிழக அரசு, ஆண்டுதோறும் செப்டம்பர் 6 ஆம் தேதியை காவலர் நாள் கொண்டாடப்படும் என அரசு அறிவித்துள்ளது. காவல்துறையின் அர்ப்பணிப்பையும், சமூக பாதுகாப்பில் அவர்களின் பங்கையும் பொதுமக்கள் நினைவு கூறும் நாளாக இது அமைகிறது.

அதனைத் தொடர்ந்து, திருப்பூர் மாநகர காவல்துறை சார்பாக, காவல் ஆணையாளர் அவர்களின் தலைமையில், 06.09.2025 காலை, ஆணையாளர் வளாகத்தில் காவல் அதிகாரிகள் மற்றும் காவலர்களுடன் காவலர் தினம் சிறப்பாகக் கொண்டாடப்பட்டது. மேலும் காவல் ஆணையாளர் தலைமையில் உறுதிமொழி எடுக்கப்பட்டது.

மேலும், திருப்பூர் மாநகர காவல் துறையினர்கள் இன்று தங்களின் குழந்தைகள் & குடும்ப உறுப்பினர்களுடன் சிறப்பாக இவ்விழாவை கொண்டாடினார்கள்.

காவல் ஆணையாளர் அவர்கள், திருப்பூர் காவலர் குடியிருப்பில்* நடைபெற்ற விளையாட்டு போட்டிகளில் வெற்றி பெற்றவர்களுக்கும் கலந்து கொண்ட அனைவர்களுக்கும் பரிசுகள்வழங்கி சிறப்பித்தார். திருப்பூர் காவல் துறையினரும், அவர்களது குடும்ப உறுப்பினர்களும் மிகுந்த உற்சாகம் அடைந்தனர்.

நாளைய வரலாறு செய்திகளுக்காக

– MMH

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Search

Recent Posts