
கோவை மாவட்டம் வால்பாறை தமிழக வெற்றி கழகம் சார்பில் பகுத்தறிவு பகலவன் தந்தை பெரியார் அவர்களின் பிறந்தநாள் விழா வால்பாறையில் சிறப்பாகக் கொண்டாடப்பட்டது.
வால்பாறை நகரச் செயலாளர் ஆண்ட்ரூஸ் தலைமையில் நடைபெற்ற இந்த விழாவில் நகரச் செயலாளர் சையது அலி முன்னிலை வகித்தார். தந்தை பெரியார் அவர்களின் கொள்கைகள் குறித்தும் அவர் சமூகத்திற்கு ஆற்றிய நன்மைகள் குறித்தும் உரையாற்றப்பட்டது.

நாளைய வரலாறு புலனாய்வு இதழின்,,,,
மேலும் பல முக்கிய காணொளி செய்திகள் காண,
Please Subscribe to This Channel to get current news ↓
https://www.youtube.com/channel/UCBXly8ucYf64DrK5QkzMOZQ
இந்நிகழ்வில் தமிழக வெற்றி கழகத்தின் முக்கிய நிர்வாகிகளான தேயிலைத் தோட்ட தொழிலாளர் நல ஆலோசகர் ரவிச்சந்திரன், இளைஞரணி அமைப்பாளர் ரியாஸ், துணைச் செயலாளர் சுதாகர், அக்கா மலை இரா. ஆசைத்தம்பி, ராஜேஷ் கண்ணா, சேவியோ, ஐ.டி. விங் அமைப்பாளர் துரை, துணை அமைப்பாளர் அஸ்வின், இளைஞரணி நிர்வாகிகள் சிவா, சந்துரு, முகேஷ், வாகன பழுது பார்க்கும் சங்கத்தின் பவின் குமார் ஆகியோர் கலந்துகொண்டனர்.
மேலும், மகளிர் அணியைச் சேர்ந்த ஆனந்தி, சங்கீதா, உமா, அபிதா, சந்தியா, ரீட்டா உள்ளிட்ட பலரும் விழாவில் கலந்துகொண்டு பெரியார் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.
பொதுமக்கள் மத்தியில் மிகுந்த வரவேற்பைப் பெற்ற இந்த நிகழ்வில் பெரியாரின் கொள்கைகள் மற்றும் சமூக பங்களிப்புகள் குறித்து எடுத்துரைக்கப்பட்டது.
நாளைய வரலாறு செய்திகளுக்காக
-P.பரமசிவம் வால்பாறை











