
தூத்துக்குடி மாநகராட்சி மாமன்ற உறுப்பினர்கள் மற்றும் அதிகாரிகளுக்கு செயற்கை நுண்ணறிவு (AI) திறன் பயிற்சியினை கனிமொழி எம்பி துவக்கி வைத்தார்.

நாளைய வரலாறு புலனாய்வு இதழின்,,,,
மேலும் பல முக்கிய காணொளி செய்திகள் காண,
Please Subscribe to This Channel to get current news ↓
https://www.youtube.com/channel/UCBXly8ucYf64DrK5QkzMOZQ
தூத்துக்குடி மாநகராட்சி மாமன்ற உறுப்பினர்கள் மற்றும் அதிகாரிகளின் தினசரி நிர்வாகத்திற்கு உதவிடவும், மக்களின் பிரச்னைகளுக்கு எளிதில் தீர்வு காணவும் செயற்கை நுண்ணறிவு (AI) திறன் பயிற்சி இன்று (13/09/2025) தூத்துக்குடி ஸ்டெம் பார்க்கில் நடைபெற்றது. இதில், திமுக துணைப் பொதுச் செயலாளரும், நாடாளுமன்றக் குழுத் தலைவருமான கனிமொழி கருணாநிதி கலந்து கொண்டு, செயற்கை நுண்ணறிவு (AI) பற்றி சிறப்புரையாற்றினார்.
இந்நிகழ்வில், தூத்துக்குடி வடக்கு மாவட்ட திமுக செயலாளரும், சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை அமைச்சருமான கீதா ஜீவன், தூத்துக்குடி மாநகராட்சி மேயர் ஜெகன் பெரியசாமி, தூத்துக்குடி மாநகராட்சி ஆணையர் பிரியங்கா, மாநகராட்சி துணை மேயர் ஜெனிட்ட செல்வராஜ், மாநகராட்சி மாமன்ற உறுப்பினர்கள் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.
நாளைய வரலாறு செய்திகளுக்காக
செய்தியாளர்
-பரணி பாலா.












