தண்ணீர் தொட்டியில் விழுந்து குழந்தை பரிதாப பலி பொள்ளாச்சி அருகே சோகம்

கோவை மாவட்டம் பொள்ளாச்சி ஆனைமலை அடுத்த கோட்டூர் பகுதியில் உள்ள பாலு காயர்ஸ் நிறுவனத்தில் தண்ணீர் தொட்டியில் தவறி விழுந்து வடமாநில தொழிலாளியின் குழந்தை உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

நாளைய வரலாறு புலனாய்வு இதழின்,,,,மேலும் பல முக்கிய காணொளி செய்திகள் காண,Please Subscribe to This Channel to get current news ↓https://www.youtube.com/channel/UCBXly8ucYf64DrK5QkzMOZQ

மத்திய பிரதேச மாநிலத்தைச் சேர்ந்த சதீஷ் கோல் (32) என்பவர் கடந்த சில மாதங்களாக பொள்ளாச்சி அடுத்த கோட்டூர் பகுதியில் உள்ள பாலு காயர்ஸ் நிறுவனத்தில் தங்கி கூலி வேலை செய்து வருகிறார்.

இந்த நிலையில் செவ்வாய்க்கிழமை அன்று நிறுவனத்தின் அருகே உள்ள குடியிருப்புப் பகுதியில் சதீஷ் கோலின் குழந்தை விளையாடிக் கொண்டிருந்தது. சிறிது நேரத்தில் குழந்தையைக் காணவில்லை என்று பெற்றோரும், அக்கம் பக்கத்தினரும் தேடியுள்ளனர்.

அப்போது அருகில் இருந்த தண்ணீர் தொட்டியில் குழந்தை தவறி விழுந்து உயிரிழந்தது தெரிய வந்தது. தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த கோட்டூர் போலீசார் குழந்தையின் உடலை மீட்டு பிரேதப் பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும், இச்சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். இச்சம்பவம் கோட்டூர் பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

நாளைய வரலாறு செய்திகளுக்காக

உங்கள் செய்தியாளர்
-M.சுரேஷ்குமார்.

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Search

Recent Posts