பசும்பொன். உ. முத்துராமலிங்கத் தேவர் அவர்களின்118 வது குருபூஜை நாள் கொண்டாடப்பட்டது!!

தேசியமும் தெய்வீகமும் தனது இரு கண்கள் என்ற உயர்ந்த கொள்கை கொண்டவர்,இந்திய சுதந்திரப் போராட்டத்தில் மக்களின் விடுதலைக்காகவும், இந்திய அரசியலிலும் தன் வாழ்க்கையை அர்ப்பணித்த தெய்வீகத்திருமகனார் பசும்பொன். உ. முத்துராமலிங்கத் தேவர் அவர்களின்118 வது குருபூஜை நாளில் தூத்துக்குடி வடக்கு மாவட்டம் ஓட்டப்பிடாரம் மேற்கு ஒன்றியம் ஜம்புலிங்கபுரத்தில் அலங்கரித்து வைக்கப்பட்டுள்ள தேவர் திருமகனார் திருஉருவ படத்திற்கு தூத்துக்குடி வடக்கு மாவட்ட எம்.ஜி.ஆர் இளைஞர் அணி துணைச் செயலாளர் சிவசுப்பிரமணியன் ஏற்பாட்டில் நடைபெற்ற விழாவில் ஓட்டப்பிடாரம் முன்னாள் சட்டமன்ற உறுப்பினரும் ஓட்டப்பிடாரம் மேற்கு ஒன்றிய கழக செயலாளருமான P.மோகன் Ex.,MLA அவர்ளும் தூத்துக்குடி வடக்கு மாவட்ட அகில இந்திய பார்வடு பிளாக் மாவட்ட செயலாளர் M.சென்பராஜ் அவர்ளும் தேவர் திருமகனார் திருவுருவ படத்திற்கு மாலை அணிவித்து மலர்தூவி மரியாதை செய்தனர்.

நாளைய வரலாறு புலனாய்வு இதழின்,,,,மேலும் பல முக்கிய காணொளி செய்திகள் காண,Please Subscribe to This Channel to get current news ↓

https://www.youtube.com/channel/UCBXly8ucYf64DrK5QkzMOZQ

உடன்‌ புதியம்புத்தூர் முருகன் நாடார், ஓட்டப்பிடாரம் மேற்கு ஒன்றிய எம.ஜி.ஆர் இளைஞர் அணி துணைச்செயலாளர் P.மலையாண்டி மற்றும் ஜம்புலிங்கபுரம் ஊர் பொதுமக்கள் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

நாளைய வரலாறு செய்திகளுக்காக

தூத்துக்குடி மாவட்ட செய்தியாளர்
-பூங்கோதை நடராஜன்.

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Search

Recent Posts