தீ பாதுகாப்பு அறிவோம்! உயிர்களை காப்போம் என்ற தலைப்பில் விழிப்புணர்வை ஏற்படுத்தி வரும் தீயணைப்புத் துறையினர்!!

தமிழ்நாட்டில் மழைக்காலம் தொடங்கி விட்டதாலும் தீபாவளி காலங்களை முன்னிட்டும் ‘நாம் பாதுகாப்பு முக்கியம்’ என்பதை வலியுறுத்தி தமிழ்நாடு தீயணைப்பு மற்றும் மீட்பு பணிகள் துறை இயக்குனர் டிஜிபி சீமா அகர்வால் அவர்களின் மேலான உத்தரவின் படி திருநெல்வேலி மண்டல துணை இயக்குனர் சரவண பாபு வழிகாட்டுதலின்படி தூத்துக்குடி மாவட்ட அலுவலர் கணேசன் அவர்கள் தலைமையில் விளாத்திகுளம் பள்ளிகள், பொது இடங்களில், மருத்துவமனை என பல இடங்களில் தீயணைப்பு துறை விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகின்றனர்.

நாளைய வரலாறு புலனாய்வு இதழின்,,,,மேலும் பல முக்கிய காணொளி செய்திகள் காண,Please Subscribe to This Channel to get current news ↓

https://www.youtube.com/channel/UCBXly8ucYf64DrK5QkzMOZQ

இதனைத் தொடர்ந்து13.10.25 விளாத்திகுளம் அரசு மேல்நிலைப் பள்ளியில் விழிப்புணர்வை ஏற்படுத்த செயல்முறையிலும் பாதுகாப்பை கடைபிடிக்கும் நிகழ்வினை நிகழ்த்திக் காட்டினார்கள் இந்நிகழ்வில் மாணவர்கள்,ஆசிரியர்கள் கலந்து கொண்டனர்.

இந்நிகழ்வில் நிலைய அலுவலர் விளாத்திகுளம் மு.சங்கர்ன் அவர்கள் விளக்கம் கூறினார் வீட்டு தீ பாதுகாப்பு, மின்சாரத் தீ பாதுகாப்பு, பட்டாசு பாதுகாப்பாக வெடித்தல், மற்றும் வாகனங்களின் தீ பாதுகாப்பு ஆகியவை குறித்து விளக்கி கூறப்பட்டது பின்னர் விளாத்திகுளம் தீயணைப்புத் துறையினர் சிறு தீயை அணைப்பது குறித்தும் பாதுகாப்பு நடைமுறைகளை குறித்தும் செயல்முறை விளக்கம் செய்து காண்பித்தனர்.

நாளைய வரலாறு செய்திகளுக்காக

தூத்துக்குடி மாவட்ட செய்தியாளர்
-பூங்கோதை நடராஜன்.

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Search

Recent Posts