தொடர் மழையால் ஆற்றில் வெள்ளப்பெருக்கு பொள்ளாச்சியில் வெள்ளத்தில் சிக்கிய இருவர் மீட்பு!!

கோவை மாவட்டம் பொள்ளாச்சி அருகே நா. மூ.சுங்கம் அருகில் பாலாற்றங்கரையில் அமைந்துள்ள பிரசித்தி பெற்ற ஆஞ்சநேயர் கோவில் வெள்ளத்தில் சிக்கிய இரண்டு முதியவர்களை இன்று (ஞாயிற்றுக்கிழமை) காலை தீயணைப்புத்துறையினர் பத்திரமாக மீட்டனர்.

நாளைய வரலாறு புலனாய்வு இதழின்,,,,மேலும் பல முக்கிய காணொளி செய்திகள் காண,Please Subscribe to This Channel to get current news ↓

https://www.youtube.com/channel/UCBXly8ucYf64DrK5QkzMOZQ

ஆற்றின் மையப் பகுதியில் இந்தக் கோவில் அமைந்துள்ளதால், கனமழையின் போது அடிக்கடி வெள்ளம் சூழ்வது வழக்கம். இந்நிலையில், நேற்று (சனிக்கிழமை) இரவு பெய்த கனமழையின் காரணமாக பாலாற்றில் கடும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது.

நேற்று சனிக்கிழமை கோவிலுக்கு வந்த இரண்டு முதியவர்கள் கோவிலிலேயே தங்கியுள்ளனர். வெள்ளப்பெருக்கு காரணமாக இருவரும் அங்கிருந்து வெளியேற முடியாமல் சிக்கிக்கொண்டனர்.
இதுகுறித்து தகவல் அறிந்த பொள்ளாச்சி தீயணைப்பு நிலைய அலுவலர் கணபதி தலைமையிலான தீயணைப்புத்துறையினர் இன்று காலை சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து, வெள்ளத்தில் சிக்கியிருந்த அந்த இரண்டு முதியவர்களையும் பத்திரமாக மீட்டனர்.

ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளதால் பக்தர்கள் கோவிலுக்குச் செல்ல வேண்டாம் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.

நாளைய வரலாறு செய்திகளுக்காக

உங்கள் செய்தியாளர்
-M.சுரேஷ்குமார்.

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Search

Recent Posts