தூத்துக்குடி மாவட்டம், விளாத்திகுளம் வேம்பார் சாலையில் M.R.R வார மாட்டுச் சந்தையை அதன் உரிமையாளர் கணபதியம்மாள் திறந்து வைத்தார்…

மாட்டுச் சந்தை என்பது மாடுகளை வாங்குவதற்கும் விற்பதற்கும் ஒரு முக்கிய இடமாகும், இது விவசாய மற்றும் கால்நடைத் தொழிலுக்கு இன்றியமையாதது. மாடு வளர்ப்போர் மற்றும் விவசாயிகளுக்கு மாட்டுச் சந்தைகள் ஒரு முக்கியமான பொருளாதார ஆதாரமாக அமைகின்றன.
ஆகவே, மாடு வளர்ப்போர் மற்றும் விவசாயிகளுக்கு முக்கிய தேவையாக இருக்கிற மாட்டுச் சந்தையானது விளாத்திகுளத்தில் தற்போது உதயமாகி இருப்பது விளாத்திகுளம் வட்டார விவசாயிகளுக்கு வெறும் பெரும் மகிழ்ச்சியையும் வரவேற்பையும் பெற்றுள்ளது.

நாளைய வரலாறு புலனாய்வு இதழின், மேலும் பல முக்கிய காணொளி செய்திகள் காண,
Please Subscribe to This Channel to get current news ↓
https://www.youtube.com/channel/UCBXly8ucYf64DrK5QkzMOZQ
விவசாயிகள், வியாபாரிகள், மாட்டு வண்டி பந்தய உரிமையாளர்கள், பந்தயம் முன் சாரதி மற்றும் பின் சாரதி,  பந்தய ரசிகர்கள் மற்றும் பொதுமக்கள் அனைவருக்கும் ஏற்ற மற்றும் விரும்ப தக்க வகையில், இன்று 3.10.2025 வெள்ளிக்கிழமை முதல் தூத்துக்குடி  மாவட்டம், விளாத்திகுளத்தில் வேம்பார் சாலையில் M.R.R. என்ற புதிய வார மாட்டுச்சந்தை உதயமாகி உள்ளது. இந்த புதிய வார மாட்டுச் சந்தையானது வாரம் தோறும் வெள்ளிக்கிழமை காலை 5 மணிக்கு  M.R.R. என்ற புதிய வார மாட்டுச் சந்தை திறப்பு விழா இன்று, விளாத்திகுளம் வேம்பார் சாலையில் நடைபெற்றது. சந்தையை அதன் உரிமையாளர் கணபதியம்மாள் திறந்து வைத்தார்.
இந்நிகழ்ச்சியில், இராமச்சந்திரன்,  விளாத்திகுளம் முன்னாள் ஊராட்சி ஒன்றிய பெருந்தலைவர் முனியசக்தி இராமச்சந்திரன், முனியசாமி, பாலமுருகன், முத்துக்குமார் மற்றும் கால்நடைகள் வளர்ப்போர், விவசாயிகள் உள்ளிட்ட என ஏராளமானோர் கலந்துகொண்டு மாடும் வாங்கி சென்றார்கள்.

நாளைய வரலாறு செய்திகளுக்காக

தூத்துக்குடி மாவட்ட செய்தியாளர்,
-பூங்கோதை நடராஜன்

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Search

Recent Posts