தமிழக சட்டமன்றம் டிராமா மன்றமாக மாறிவிடுமோ? – அண்ணாமலை

கோவை: வி த லீடர்ஸ் அமைப்பு தலைவர் அண்ணாமலை, கோவையில் செய்தியாளர்களை சந்தித்தார்.

அப்போது பேசிய அவர், நேபாளத்தில் கைலாஷ் யாத்திரைக்கு 2025–2026 ஆம் ஆண்டு முதல் அனுமதி வழங்கப்பட்டுள்ளதாகவும், கடந்த 5 ஆண்டுகளாக அனுமதி வழங்கப்படவில்லை என்றும் தெரிவித்தார். கைலாய யாத்திரை செல்வதில் பல்வேறு சிக்கல்கள் இருப்பதாகவும், விபத்தில் பல ஊர்கள் காணாமல் போயுள்ளதாகவும் கூறினார்.

உயிரிழந்தவர்களின் உடல்களை மீட்டு இந்தியாவுக்கு கொண்டு வருவதிலும் சிக்கல் இருப்பதால், தமிழக அரசு உடனடியாக தலையிட்டு மீட்புக் குழுவை அனுப்ப வேண்டும் என வலியுறுத்தினார். மேலும், இந்த விவகாரம் தொடர்பாக தமிழக அரசு உறுதியான தகவல்களை மக்களுக்கு வழங்க வேண்டும் என்றும் கேட்டுக்கொண்டார்.

நாளைய வரலாறு புலனாய்வு இதழின்,,,,மேலும் பல முக்கிய காணொளி செய்திகள் காண,Please Subscribe to This Channel to get current news ↓

https://www.youtube.com/channel/UCBXly8ucYf64DrK5QkzMOZQ

கல்லூரிகளில் மாணவர்கள் குழுக்களை அமைத்து அரசியல் செயல்பாடுகளில் ஈடுபடுவதை ஊக்குவிக்க வேண்டும் என்றும் அண்ணாமலை தெரிவித்தார். அவ்வாறு இல்லாவிட்டால், அரசியல் குறித்து பேசுவது, அரசு அதிகாரிகளிடம் தங்களது பிரச்சினைகளை எடுத்துரைப்பது உள்ளிட்டவை மாணவர்களுக்கு தெரியாமல் போய்விடும் என்றும் கூறினார். கல்லூரி அரசியல் சரியாக இருந்தால் பல்வேறு பிரச்சினைகளுக்கு அதுவே தீர்வாக அமையும் என்றும் அவர் குறிப்பிட்டார்.

உச்சநீதிமன்றம் தீர்ப்பு அளித்திருந்த போதிலும், தமிழகத்தில் கல்லூரி அரசியல் மிகவும் மோசமான நிலையில் இருப்பதாகவும், இதனால் அரசியல் கட்சிகளுக்கு வரக்கூடிய இளம் தலைவர்கள் உருவாகாமல் போய்விடுவார்கள் என்றும் அண்ணாமலை கூறினார்.

இதனிடையே, ‘வி த லீடர்ஸ்’ அமைப்பு சார்பில் இதுவரை 8 லட்சம் மரக்கன்றுகள் நடப்பட்டுள்ளதாகவும், 20 லட்சம் மரக்கன்றுகள் நடுவது இலக்கு என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

நாளைய வரலாறு செய்திகளுக்காக

-சீனி,போத்தனுர்.

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Search

Recent Posts