கோவில்பட்டி அருகே உதயநிதி ஸ்டாலின் பிறந்தநாள் விழா – நலத்திட்ட உதவிகள் வழங்கிய மாவட்ட கவுன்சிலர் பிரியா குருராஜ்…

துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் பிறந்தநாளையொட்டி நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா முடுக்குமீண்டான்பட்டி ஆதரவற்ற பெண்கள் காப்பகத்தில் நடைபெற்றது.
மாவட்ட கவுன்சிலர் பிரியா குருராஜ் ஏற்பாட்டில் நலத்திட்ட உதவிகள்
வழங்கப்பட்டது. திமுக இளைஞரணி செயலாளர் உதயநிதி ஸ்டாலினின் 49 -வது பிறந்த நாள் விழா தமிழகம் முழுவதும் திமுகவினரால் நேற்று கொண்டாடப்பட்டது.

அந்த வகையில் கோவில்பட்டி சட்டமன்ற தொகுதி திமுக சார்பில் திமுக இளைஞரணி செயலாளர், உதயநிதி ஸ்டாலின் அவர்களின் பிறந்த நாளை முன்னிட்டு தூத்துக்குடி மாவட்டம், கோவில்பட்டி அருகே உள்ள முடுக்குமீண்டான்பட்டி பகுதியில் அமைந்துள்ள ஆதரவற்ற பெண்கள் பாதுகாப்பு இல்லத்தில் வசிக்கும் பெண்கள் அனைவருக்கும் புதிய உடைகள் உள்ளிட்ட நலத்திட்ட உதவிகளை மாவட்ட கவுன்சிலர் பிரியா குருராஜ் வழங்கினார்.

அதன்பின் மதியம் அருசுவை உணவு வழங்கப்பட்டது. இந்நிகழ்விற்கு கோவில்பட்டி மேற்கு ஒன்றிய கழகச் செயலாளர் ராதாகிருஷ்ணன் தலைமை வகித்தார். கோவில்பட்டி வடக்கு ஒன்றிய கழக செயலாளர் ஜெய கண்ணன், கழக பொதுக்குழு உறுப்பினர் ரமேஷ் ஆகியோர் முன்னிலை வகித்தனர். தாமோதரகண்ணன், மகளிர் அணி நிர்வாகிகள் மேனகா, விஜயலட்சுமி, கலா, பாலம்மாள், நாலாட்டின்புத்தூர் ஊராட்சி செயலாளர் கிருஷ்ணசாமி, ராஜி, ராஜாபுதுக்குடியை சேர்ந்த பால்ராஜ் மற்றும் திமுக நிர்வாகிகள் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர். நாளைய வரலாறு புலனாய்வு இதழின்,,,,மேலும் பல முக்கிய காணொளி செய்திகள் காண,Please Subscribe to This Channel to get current news ↓

https://www.youtube.com/channel/UCBXly8ucYf64DrK5QkzMOZQ

நாளைய வரலாறு செய்திகளுக்காக கோவில்பட்டி செய்தியாளர்,

 -ராஜ்குமார்.

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Search

Recent Posts