
திராவிடத்தின் இளவரசர் உதயநிதி ஸ்டாலின் மக்கள் மனதில் அசைக்க முடியாத இடத்தைப் பிடிக்க வாழ்த்துகிறேன் என்று பிரியா குருராஜ் கூறியுள்ளார்.;

நாளைய வரலாறு புலனாய்வு இதழின்,,,,மேலும் பல முக்கிய காணொளி செய்திகள் காண,Please Subscribe to This Channel to get current news ↓
https://www.youtube.com/channel/UCBXly8ucYf64DrK5QkzMOZQ

G.பிரியா Dr.S.குருராஜ் phd.,
முன்னாள் மாவட்ட கவுன்சிலர், கோவில்பட்டி சட்டமன்ற தொகுதி
தமிழ்நாடு துணை முதல்-அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தனது 48-வது பிறந்த நாளை கொண்டாடுகிறார். இதனையொட்டி ஏராளமானோர் அதிகாலை முதலே அவருக்கு வாழ்த்துகளை தெரிவித்து வருகின்றனர். அந்த வகையில் துணை முதல்-அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பிறந்தநாளையொட்டி மாவட்ட கவுன்சிலர் பிரியா குருராஜ் வாழ்த்து தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக பிரியா குருராஜ் கூறியிருப்பதாவது:
தமிழ்நாட்டு அரசியலின் இளமைக் குரலாய்த் திகழும் துணை முதல்வர், மாண்புமிகு அமைச்சர் அண்ணன் உதயநிதி ஸ்டாலின் அவர்களுக்கு பிறந்தநாள் நல்வாழ்த்துகள். மென்மேலும் பல சாதனைகள் படைத்து மக்கள் மனதில் அசைக்க முடியாத இடத்தைப் பிடிக்க உளங்கனிந்த நல்வாழ்த்துகள்” என்று தெரிவித்துள்ளார்.
2026 தேர்தலில் தி.மு.க.விற்கு மிகப்பெரிய வெற்றியை தேடி தருவதே தனது பிறந்தநாள் உறுதிமொழி என துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் கூறியதை போல, தி.மு.க.வெற்றிக்கு தூத்துக்குடி மாவட்ட திமுக வினர் அனைவரும் அயராது உழைப்போம் என்று மாவட்ட கவுன்சிலர் பிரியா குருராஜ் சபதம் எடுத்துள்ளார்.
மேலும், உதயநிதி ஸ்டாலின் அவர்களின் 48-வது பிறந்தநாளை முன்னிட்டு, தூத்துக்குடி மாவட்டம், கோவில்பட்டி சட்டமன்ற தொகுதிக்குப்பட்ட கயத்தாரில் கழக கொடியேற்றி இனிப்பு வழங்கியும், ஆதவரவற்ற முதியோர் இல்லங்களில் உணவுகள் வழங்கியும், ஏழை எளிய மக்கள் பெரிதும் பயன்பெறும் விதத்தில் நலத்திட்ட உதவிகள் வழங்கி எழுச்சியுடன் கொண்டாடப்படும். இவ்வாறு அதில் கூறி உள்ளார்.
நாளைய வரலாறு செய்திகளுக்காக
கோவில்பட்டி செய்தியாளர்
– ராஜ்குமார்.











