மனைவி மற்றும் மகனை ரயில் ஏற்ற வந்தவர் ரயிலின் அடியில் சிக்கி பரிதாபமாக உயிரிழப்பு!!

கேரளா மாநிலம் பாலக்காடு மாவட்டம் பட்டாம்பியில் தனது மனைவி மற்றும் மகனை ரயில் ஏற்றி விடுவதற்கு வந்தவர் ரயிலின் அடியில் சிக்கி உயிரிழந்தார்.

நாளைய வரலாறு புலனாய்வு இதழின்,,,,மேலும் பல முக்கிய காணொளி செய்திகள் காண,Please Subscribe to This Channel to get current news ↓

https://www.youtube.com/channel/UCBXly8ucYf64DrK5QkzMOZQ

உத்தரபிரதேசத்தைச் சேர்ந்த இக்பால் கான் தன் மனைவியையும் மகனையும் தனது ஊருக்கு அனுப்பிவிடுவதற்கு பட்டாம்பி ரயில் நிலையத்திலிருந்து எர்ணாகுளம் நிஜாமுதீன் மங்களா எக்ஸ்பிரஸில் S1 கம்பார்ட்மெண்டில் ஏற்றிவிட்டு அவர்களின் பொருட்களையம் ஏற்றிய பிறகு ரயிலிலிருந்து இங்கும் பொழுது ரயில் மெதுவாக நகர்ந்ததினால் கீழே விழுந்து விட்டார். இக்பால் கான் ரயிலிலிருந்து விழுவதை பார்த்த குடும்பத்தினர் கூச்சலிட்டதால் பயணிகள் ரயிலை நிறுத்த சங்கிலியை இழுத்தனர். ரயில் நின்றும் பயனில்லாமல் அவர் ரயிலுக்கு அடியில் சிக்கி உடல் இரண்டாக துண்டிக்கப்பட்டு பரிதாபமாக உயிரிழந்தார்.

இந்த சம்பவம் நேற்று மாலை பட்டாம்பி ரயில் நிலையத்தின் முதல் எண் நடைமேடையில் நடந்துள்ளது. இந்த சோக சம்பவத்தால் ரயில் நிலையம் பரபரப்பாக காணப்பட்டது.

பட்டாம்பி போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து நடவடிக்கை மேற்கொண்டார்கள்.

நாளைய வரலாறு செய்திகளுக்காக

-HJ

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Search

Recent Posts