
கோவை மாவட்டம் பொள்ளாச்சி வட்டாரம் ஆழியார் வனவிலங்கு சரணாலயம் பகுதியில் உள்ள வால்பாறைக்கு செல்லும் வழியில் ஆழியார் செக் போஸ்ட் அருகாமையில் பல நாட்களாக அப்பகுதியில் கொம்பனின் சரித்திரம் படைத்து வரும் காட்டு ராஜாவால் இரவு நேரங்களில் அவ்வழியே வரும் வாகனங்கள் பொதுமக்கள் பயந்த வண்ணமாக உள்ளனர்.

நாளைய வரலாறு புலனாய்வு இதழின்,,,,மேலும் பல முக்கிய காணொளி செய்திகள் காண,Please Subscribe to This Channel to get current news ↓
https://www.youtube.com/channel/UCBXly8ucYf64DrK5QkzMOZQ
அப்பகுதியில் இரவு நேரங்களில் வாகனங்கள் அத்தியாவசியமின்றி செல்லக்கூடாது என்பது எச்சரிக்கையாக உள்ளது. அவ்வழியே வரும் சுற்றுலா பயணிகள் யானைகளைக் கண்டு ஆர்னடிப்பதும் கூச்சலிடுவதும் விலங்குகளை பயமுறுத்துவதும் அப்பகுதியில் அதிகளவு நடந்து கொண்டு உள்ளது.
அரசு பேருந்து வாகன ஓட்டுநர்கள்,108 வாகன ஓட்டுனர்கள், பால் வண்டி வாகன ஓட்டுநர்கள்,பேப்பர் வாகன ஓட்டுனர்கள், அத்தியாவசிய இதர வாகன ஓட்டுனர்கள் ஆகியோர் மற்றவர்கள் செய்யக்கூடிய இதுபோன்ற தவறுகளால் பாதிக்கப்படுகிறார்கள்.
இதனை கருத்தில் கொண்டு அப்பகுதியில் உள்ள வனவிலங்கு அதிகாரிகள் வனவிலங்குகளை துன்புருத்துபவர்களின் மீது சட்டப்படி நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என கூறி வருகின்றனர்.
நாளைய வரலாறு செய்திகளுக்காக
வால்பாறையில் இருந்து செய்தியாளர்
-திவ்யக்குமார்.











