கோவை ஈச்சனாரி சாலையில் விபத்து..!!

கோவை மாவட்டம் போத்தனூர் ஈச்சனாரி சாலையில் செல்வம் மஹால் அருகே இன்று மதியம் இருசக்கர வாகனத்தில் வந்த நபர் மற்றொரு நபர் மீது மோதி விபத்து ஏற்பட்டது.

நாளைய வரலாறு புலனாய்வு இதழின்,,,,மேலும் பல முக்கிய காணொளி செய்திகள் காண,Please Subscribe to This Channel to get current news ↓

https://www.youtube.com/channel/UCBXly8ucYf64DrK5QkzMOZQ

பொள்ளாச்சி ரோடு மற்றும் செட்டிபாளையம் சாலையை இணைக்கும் சாலை ஈச்சனாரி சாலை. இந்த சாலையில் தினந்தோறும் நான்கு சக்கரம்,இரண்டு என ஆயிரக்கணக்கான வாகனங்கள் பயணிக்கின்றர். போக்குவரத்து நெருக்கடியான இந்த சாலையில் அடிக்கடி விபத்துகளும் அரங்கேறி வருகின்றது.

அதிவேகமாக வந்த இரு சக்கர வாகனம் ஒன்று மற்றொரு இரு சக்கர வாகனம் மீது மோதியதில் முதியவர் ஒருவர் தூக்கி எறியப்பட்டார். தலை மற்றும் கால்களில் காயம் ஏற்பட்டது. அவரை அங்குள்ள பொதுமக்கள் மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

இந்த சாலையில் கல்லூரி வாகனங்கள் மற்றும் லாரிகள் என அனைத்து வாகனங்களும் அதிக அளவில் பயணிக்கின்றன. குறிப்பாக கல்லூரி மாணவர்கள் இந்த சாலையை அதிக அளவில் பயன்படுத்துகின்றனர். இந்த சாலையில் இரண்டு சக்கரத்தில் பயணிக்கும் மாணவர்கள் அதிவேகத்தில் பயணிப்பதால் விபத்துக்கு உள்ளாகி தன் உயிரை மாய்க்கும் நிலையும் ஏற்படுகிறது.

இந்த சாலையை சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உடனடியாக தனி கவனத்தில் எடுத்துக் கொண்டு வேகத்தடை எனப்படும் டிவைடர்கள் அமைத்து கேமராக்கள் பொருத்தி கண்காணிக்க வேண்டும் என்று அந்தப் பகுதி பொதுமக்கள் மற்றும் சமூக ஆர்வலர்கள் கோரிக்கை வைக்கிறார்கள்.

நாளைய வரலாறு செய்திகளுக்காக

தலைமை நிருபர்

-ஈசா.

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Search

Recent Posts