தூத்துக்குடி திமுக ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றதில் அனிதா ராதாகிருஷ்ணன் பேசினார்.

தூத்துக்குடியில் முதல்வா் முக.ஸ்டாலின் உத்தரவுகளை துணை முதல்வா் உதயநிதி கனிமொழி எம்.பி வழியில் அனைவரும் இணைந்து நிறைவேற்றுவோம். தூத்துக்குடி ஆலோசனை கூட்டத்தில் அமைச்சா் அனிதா ராதாகிருஷ்ணன் பேசினாா்.

நாளைய வரலாறு புலனாய்வு இதழின்,,,,மேலும் பல முக்கிய காணொளி செய்திகள் காண,Please Subscribe to This Channel to get current news ↓

https://www.youtube.com/channel/UCBXly8ucYf64DrK5QkzMOZQ

தூத்துக்குடி தெற்கு மாவட்ட திமுக செயற்குழு நிா்வாகிகள் ஆலோசனை கூட்டம் மாவட்ட அலுவலகத்தில் அவைத்தலைவர் அருணாச்சலம் தலைமையில் நடைபெற்றது.
தெற்கு மாவட்ட திமுக செயலாளரும் மீன்வளம் மீனவா் நலன் மற்றும் கால்நடைபராமாிப்புதுறை அமைச்சர் அனிதாராதாகிருஷ்ணன் பேசுகையில் தமிழக முதலமைச்சர் தளபதியாா் உத்தரவிற்கிணங்க இந்த ஆலோசனை கூட்டம் நடைபெறுகிறது.

துணை முதல்வா் உதயநிதி ஸ்டாலின், கனிமொழி எம்.பி வழியில் அனைவரும் இணைந்து அதை நிறைவேற்றும் வழியில் நாம் இருக்கிறோம் முதல்வா் தலைமையில் நடைபெற்ற அனைத்து கட்சி கூட்டத்தில் முதல்வா் இந்த எஸ்ஐஆர் என்ற தோ்தல் ஆணையம் உத்தரவை எதிா்த்து உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடரப்போவதாக கூறியுள்ளாா். ஏற்கனவே பீகாாில் இதுபோன்ற தோ்தல் ஆணையத்தில் முறைகேடுகள் குறைபாடுகள் குறித்து உச்சநீதிமன்றத்தில் தொடரப்பட்ட வழக்கு நிலுவையில் இருந்து வருகிறது. இந்நிலையில் தமிழ்நாடு உள்பட 12 மாநிலங்களில் மீண்டும் தோ்தல்ஆணையம் நடைமுறைகளை செயல்படுத்த உத்தரவு பிறப்பித்துள்ளது.

முதலமைச்சர் எடுக்கும் எந்த வீதமான போராட்டமாக இருந்தாலும் அதை முன்னெடுத்து சென்று அதில் நாம் பயணிப்போம் ஏற்கனவே பிஎல்2 உள்ளிட்ட அமைப்புகளில் இருப்பவா்களுக்கு பொறுப்பு உண்டு அவா்களோடு இணைந்து ஓன்றிய நகர பேரூா் கிளைச்செயலாளர்களும் இளைஞர் அணி மகளிா் அணி மாணவரணி வழக்கறிஞர் அணி என அனைத்து அணிகளும் இணைந்தே பணியாற்ற வேண்டும். நம் மீது தலைமை முழு நம்பிக்கை வைத்து இந்த உத்தரவை பிற்பபித்துள்ளாா்கள் இதில் முழுமையாக ஈடுபடுபவா்களை உற்சாகப்படுத்தி நமக்கு இதில் என்ன பொறுப்பு இருக்கிறது. ஓன்றுமில்லை என்று ஓதுங்கிவிடாமல் பணி செய்ய வேண்டும். அனைவருக்குமான பொறுப்பு என்பதை உணர வேண்டும் 4ம் தேதி தொடங்கி ஓருமாத காலம் நடைபெறுகிறது. இதில் ஏற்கனவே 100 வாக்காளா்களுக்கு ஓரு முகவா் என நாம் நியமித்துள்ளோம். அவர்கள் அந்த பணியையும் காலை மாலை இரு வேளைகளிலும் முழுமையாக ஈடுபடுத்திக்கொண்டு 10ம் தேதிக்கும் அனைவற்றையும் முடித்து கொடுக்க வேண்டும். 2026 தோ்தலில் மீண்டும் தளபதியாரை முதலமைச்சராக்க சபதம் ஏற்று பணியாற்றுவோம் என்று பேசினாா்.

கூட்டத்தில் சண்முகையா எம்.எல்.ஏ, மாவட்ட துணைச்செயலளார்கள் ஜெயக்குமாா் ரூபன், ஜெபத்தங்கம் பிரேமா, ஆறுமுகபெருமாள், மாநில மகளிர் அணி பிரச்சாரக் குழு செயலாளர் ஜெஸி பொன்ராணி, ஸ்ரீவைகுண்டம் தொகுதி பாா்வையாளரும் கன்னியாகுமாி மருத்துவ அணி அமைப்பாளர் சுரேஷ், ஓட்டப்பிடாரம் தொகுதி பாா்வையாளரும் மாநில இலக்கிய அணி துணைச்செயலாளரும் பெருநாழி போஸ், தலைமை செயற்குழு உறுப்பினர்கள் செந்தூர்மணி மாடசாமி, பிரம்மசக்தி, தலைமை கழக வழக்கறிஞர் மனோஜ், மாவட்ட அணி அமைப்பாளர்கள் ராமஜெயம், சுரேஷ், வீரபாகு, செல்வபெருமாள், செல்வகுமாா், ரகுராமன், சாரதா பொன்இசக்கி, தயாநிதி பாண்டியன், ரெங்கநாதன் என்ற சுகு போின்ப ராஜ் லாசரஸ், ஆனந்த், மகாவிஷ்னு, ஸ்ரீதா் ரொட்ாிக்கோ, சுரேஷ்குமாா், ரவி என்ற பொன்பாண்டி, கலில்ரகுமான், அஜய்ரெக்ஸ், ஓன்றிய செயலாளர்கள் இளையராஜா, ஜெயக்கொடி, ராமசாமி, புதூர் சுப்பிரமணியன், சுரேஷ்காந்தி, கொம்பையா, இளங்கோ, ரவி, ஜோசப், பாலமுருகன் முருகேசன், இசக்கிபாண்டியன், சதீஷ், நவீன்குமாா், பாலசிங், ரமேஷ், பாா்த்திபன், கோட்டாளம், பகுதிசெயலாளர்கள் சிவக்குமாா், ஆஸ்கா், நகர செயலாளர்கள் முத்து முகமது சுடலை பேரூா் செயலாளர்கள் இளங்கோ ராயப்பன் சுப்புராஜ் நவநீத முத்துக்குமாா் கண்ணன், கோபிநாத், முத்துவீரப்பெருமாள், நவநீதபாண்டியன், ஜமீன்சாலமோன், மால்ராஜேஷ், முருகானந்தம், மாநகராட்சி கணக்கு குழு தலைவர் ரெங்கசாமி, மாவட்ட இளைஞா் அணி துணை அமைப்பாளர்கள் வக்கீல் பால்துைர ஸ்டாலின், மாவட்ட பிரதிநிதி பூபேஸ்நாதன், உள்பட பலா் கலந்து கொண்டனர்.

நாளைய வரலாறு செய்திகளுக்காக

செய்தியாளர்
-பரணி பாலா.

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Search

Recent Posts