
கோவை மாவட்டம் வால்பாறையில் அமைந்துள்ள நகர கூட்டுறவு வங்கியானது, பல ஆண்டுகளாகச் சாமானிய மக்களின் வங்கித் தேவைகளைப் பூர்த்தி செய்ய முடியாமல் செயல்பட்டு வருகிறது. ரிசர்வ் வங்கியின் கட்டுப்பாட்டில் உள்ள இந்த வங்கி, தொழிலாளர்களின் நலனைப் பாதுகாக்கும் நோக்குடன் பல வருடங்களுக்கு முன்னர் தொடங்கப்பட்டது. எனினும், தற்போது அனைத்துத் தரப்பு மக்களுக்கும் எந்தவிதப் பயனும் அளிக்காத நிலையில் உள்ளது.

நாளைய வரலாறு புலனாய்வு இதழின்,,,,மேலும் பல முக்கிய காணொளி செய்திகள் காண,Please Subscribe to This Channel to get current news ↓
https://www.youtube.com/channel/UCBXly8ucYf64DrK5QkzMOZQ

இதனைக் கருத்தில்கொண்டு, மாண்புமிகு தமிழக முதல்வர் அவர்கள், வால்பாறை நகர கூட்டுறவு வங்கியை நகர கூட்டுறவு கடன் சங்கமாக அறிவிக்க வேண்டும் என்று இந்திய கம்யூனிஸ்ட் கட்சி (மார்க்சிஸ்ட்) நிர்வாகி, வால்பாறை பரமசிவம் அவர்கள் கோரிக்கை விடுத்துள்ளார்.
படித்த இளைஞர்கள், தொழிலாளர்கள் பயன்பெற வாய்ப்பு
இந்த வங்கியை நகர கூட்டுறவு கடன் சங்கமாக மாற்றினால், இப்பகுதியில் உள்ள படித்த மாணவச் செல்வங்கள், தொழிலாளர்கள், பொதுமக்கள் ஆகியோர் சுய தொழில் கடன், மகளிர் கடன் மற்றும் பல திட்டங்களின் மூலம் பயன்பெறுவார்கள்.
குறைந்த சம்பளம் மற்றும் அடிப்படை வசதிகள் இல்லாமல் தவிக்கும் மக்களுக்கு இது பேருதவியாக இருக்கும் என்றும், இதன் மூலம் வங்கியின் செயல்பாடுகளை விரிவுபடுத்தலாம் என்றும் பரமசிவம் குறிப்பிட்டுள்ளார்.
ஆக்கிரமிப்பில் உள்ள இடங்களை மீட்கவும் வலியுறுத்தல்
மேலும், வால்பாறை நகரப் பகுதியில் இந்த வங்கிக்குச் சொந்தமான பல இடங்கள் பொதுமக்கள் பயன்பாட்டுக்கு இல்லாமல் இருப்பதாகவும், ஒரு சிலர் அவற்றை ஆக்கிரமிப்பு செய்துள்ளதாகவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
இது தொடர்பாக நேரடியாக ஆய்வு செய்ததில், நகரின் மையப் பகுதியில் உள்ள வங்கிக்குச் சொந்தமான பல இடங்கள் பயன்பாடு இன்றி இருப்பது உறுதிப்படுத்தப்பட்டது. அரசு வளர்ச்சிப் பணிகளுக்கு இடம் இல்லாமல் இருக்கும் நிலையில், இது போன்ற இடங்களை மக்கள் வளர்ச்சிப் பணிக்கோ அல்லது வாடகைக்கோ கொடுக்கப்பட்டால், வங்கியின் வளர்ச்சிக்கான நிதி உதவிகளை எளிதில் பெறலாம். மேலும், இந்த இடங்கள் பொதுப் பயன்பாட்டுக்கு வருவது மக்கள் நலனுக்குப் பயனுள்ளதாக இருக்கும்.
பொதுமக்கள் நலனைக் கருத்தில் கொண்டு, மாண்புமிகு தமிழக முதல்வர் அவர்கள் இந்த விஷயத்தில் நடவடிக்கை எடுப்பார் என்று நம்புவதாக சி.பி.ஐ.எம். நிர்வாகி பரமசிவம் தெரிவித்துள்ளார்.
மாண்புமிகு தமிழக முதல்வர் அவர்கள் இந்தப் பிரச்சனையில் கவனம் செலுத்தி, வால்பாறை மக்களின் நலன் காக்க உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதே அப்பகுதி மக்களின் எதிர்பார்ப்பாக உள்ளது.
நாளைய வரலாறு செய்திகளுக்காக
உங்கள் செய்தியாளர் உங்கள்
-சுரேஷ் குமார்.











