
கோவில்பட்டியில் பள்ளி மாணவ, மாணவியர்களுக்கு தென் மண்டல அளவிலான ஓபன் டோர்னமெண்ட் போட்டி நடைபெற்றது.
இதில் பள்ளி மாணவ, மாணவியர்கள் கலந்து கொண்டு தங்களது திறமையை வெளிப்படுத்தினர்.

நாளைய வரலாறு புலனாய்வு இதழின்,,,,மேலும் பல முக்கிய காணொளி செய்திகள் காண,Please Subscribe to This Channel to get current news ↓
https://www.youtube.com/channel/UCBXly8ucYf64DrK5QkzMOZQ
தூத்துக்குடி மாவட்டம், கோவில்பட்டியில் உள்ள உண்ணாமலை இன்ஸ்டிட்யூட் ஆஃப் டெக்னாலஜி கல்லூரியில், சவுத் இந்தியன் ஸ்போர்ட்ஸ் மற்றும் கல்ச்சுரல் ட்ரஸ்ட் சார்பாக தென் மண்டல அளவிலான போட்டி சிலம்பம், செஸ், ஸ்கேட்டிங், யோகா போன்ற அனைத்து பள்ளி மாணவர்களும் பங்கு பெறக்கூடிய ஓபன் டோர்னமெண்ட் விளையாட்டு போட்டிகள் கல்லூரி மைதானத்தில் நடைபெற்றது. வெற்றி பெற்ற அணிகளுக்கு பரிசளிப்பு விழா கல்லூரி வளாகத்தில் நடைபெற்றது.
அதன்பின்னர் நடைபெற்ற பரிசளிப்பு விழாவில் சிறப்பு விருந்தினராக திமுக சார்பில் மாவட்ட கவுன்சிலர் பிரியா குருராஜ் கலந்து கொண்டார்.
மேலும் வெற்றி பெற்ற விளையாட்டு வீரர்களுக்கு வாழ்த்துகளையும் சான்றிதழ் மற்றும் கோப்பைகளை வழங்கி பாராட்டினார்.
பங்கேற்ற பள்ளி மாணவர்களுக்கு உடல் திறன் பேணிக்காத்தல் அதன்மூலம் கிடைக்கப்பெறும் பலன்கள் போன்றவற்றை எடுத்துரைத்தார்.
வேறு மாவட்டங்கள் அல்லது மாநிலங்களுக்கு விளையாட்டு போட்டிகளில் பங்கேற்க செல்ல கூடியவர்களுக்கு அனைத்து உதவிகளையும் நிச்சயமாக நாங்கள் செய்வோம், என்றார்.
இந்த நிகழ்ச்சியில் சவுத் இந்தியன் ஸ்போர்ட்ஸ் கல்ச்சுரல் டிரஸ்ட் சார்பாக கோவில்பட்டி வேல்முருகன், கயத்தாறு தொழிலதிபர் மணி, அய்யனேரி பஞ்சாயத்து தலைவர் கமல், ராஜாபுதுக்குடியைச் சேர்ந்த பால்ராஜ், சதீஷ்குமார் மற்றும் அனைத்து பள்ளிகளின் உடற்கல்வி ஆசிரியர்கள், விளையாட்டு வீரர்கள் மற்றும் பெற்றோர்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
நாளைய வரலாறு செய்திகளுக்காக
கோவில்பட்டி செய்தியாளர்
– ராஜ்குமார்.











