
கோவில்பட்டி, முத்துநகர் ஸ்ரீ மகாகணபதி ஆலயத்தில் 108 சங்காபிஷேகம் நடைபெற்றது.
இதையொட்டி கோவில் நடை திறக்கப்பட்டு சாயரட்சை பூஜை, கணபதி பூஜை சங்கல்பம் புன்னியாக வாசனம் கும்ப பூஜை, சங்கு பூஜை நடைபெற்றது.

நாளைய வரலாறு புலனாய்வு இதழின்,,,,மேலும் பல முக்கிய காணொளி செய்திகள் காண,Please Subscribe to This Channel to get current news ↓
https://www.youtube.com/channel/UCBXly8ucYf64DrK5QkzMOZQ

தொடர்ந்து மகா கணபதி மற்றும் சங்கரலிங்க சுவாமிக்கு மஞ்சள் பொடி, மாபொடி, திரவியம், பால், தயிர், இளநீர், தேன், சந்தனம், வாசனை திரவியங்கள் கொண்டு சிறப்பு அபிஷேகமும் 108 சங்காபிஷேகம் நடைபெற்று சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு தீபாராதனை நடைபெற்றது.
பூமாதேவி ஆலய குருக்கள் செல்வசுப்பிரமணியன் தலைமையில் சுப்பிரமணியன் சுவாமி ஆறுமுகம் குருக்கள் பூஜைகளை செய்தனர். இவ்விழாவில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர். நிறைவாக பிரசாதம் வழங்கப்பட்டது. இவ்விழா எற்பாடுகளை ஸ்ரீ மகாகணபதி ஆலய நிர்வாக குழுவினர் செய்திருந்தனர்.
நாளைய வரலாறு செய்திகளுக்காக
கோவில்பட்டி செய்தியாளர்
– ராஜ்குமார்.












