குடியிருப்பு பகுதிகளில் துர்நாற்றம் வீசுவதால் மக்கள் அவதி..!!

கோவை மாவட்டம் போத்தனூர் செட்டிபாளையம் ரோடு அருகிலுள்ள ஸ்ரீராம் நகர், அருள்முருகன் நகர், மேட்டுத்தோட்டம், காந்திநகர், அன்பு நகர், ஈஸ்வர் நகர், பகுதிகளில் கடந்த சில நாட்களாக மிக மோசமான முறையில் துர்நாற்றம் வீசுவதால் மக்கள் பெரும் அவதிக்குள்ளாகி வருகின்றனர்.

நாளைய வரலாறு புலனாய்வு இதழின்,,,,மேலும் பல முக்கிய காணொளி செய்திகள் காண,Please Subscribe to This Channel to get current news ↓

https://www.youtube.com/channel/UCBXly8ucYf64DrK5QkzMOZQ

வெள்ளலூர் குப்பை கிடங்கில் இருந்து வரும் துர்நாற்றம் மக்கள் அனைவரையும் முகம் சுளிக்க வைக்கின்றது.

இந்த குடியிருப்பு பகுதியில் வசித்து வரும் முதியவர்கள் முதல் குழந்தைகள் வரை சுவாசம் விடுவதில் சிரமப்படுவதால் பல்வேறு உடல் உபாதைகளுக்கு ஆளாகி வருகின்றனர். நோய் பரவல் அதிகமாக இருப்பதால் சம்பந்தப்பட்ட மாநகராட்சி அதிகாரிகள் கவனத்தில் எடுத்துக் கொண்டு இந்த துர்நாற்றத்தை மருந்து தெளித்து கட்டுப்படுத்த வேண்டும் என்று கூறிக் கொள்வதோடு பொதுமக்களும் சமூக ஆர்வலர்களும் குப்பைக் கிடங்கை இந்த பகுதியில் இருந்து அகற்ற வேண்டும் என்று கூறுகின்றனர்.

நாளைய வரலாறு செய்திகளுக்காக

குறிச்சி நிருபர்

-ராஜா.

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Search

Recent Posts