
கோவை மாவட்டம் பொள்ளாச்சி வட்டாரம் வால்பாறை, சிங்கோனா பகுதியில் பத்தாம் பாத்தி உபாசி தேயிலை ஆராய்ச்சி மையம் உள்ளது. அப்பகுதியில் உள்ள சாலை பழுதாகி பல வருட கணக்கில் கிடப்பில் போடப்பட்டுள்ளது. இதை எஸ்டேட் நிர்வாகிகள்,வால்பாறை நகராட்சி ஆய்வாளர்,சாலை அமைப்ப அதிகாரிகள் மற்றும் அப்பகுதி கவுன்சிலரிடமும் கூறியும் எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லை.

நாளைய வரலாறு புலனாய்வு இதழின்,,,,மேலும் பல முக்கிய காணொளி செய்திகள் காண,Please Subscribe to This Channel to get current news ↓
https://www.youtube.com/channel/UCBXly8ucYf64DrK5QkzMOZQ


பலமுறை புகார்கள் தெரிவித்தும் அப்பகுதியில் நடவடிக்கை எடுக்கவில்லை. இந்த சாலையில் ஏதேனும் விபத்துக்கள் ஏற்படும் முன்னே நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பொதுமக்கள் கூறுகிறார்கள்.
சாலைகள் சேதமடைந்துள்ளதால் அப்பகுதிக்கு வரும் அரசு பேருந்துகள் அதிகளவு வருவதில்லை ஏதேனும் அவசரங்களுக்கு வாடகை வண்டி அழைத்தாலும் வருவதில்லை. இந்த செய்தியை பார்த்தாலாவது ஏதேனும் நடவடிக்கை எடுப்பார்களா என அப்பகுதி மக்கள் எதிர்பார்த்திருக்கிறார்கள்.
நாளைய வரலாறு செய்திகளுக்காக
வால்பாறையில் இருந்து
-திவ்யக்குமார்.











